தொலைக்காட்சி!!

Sunday, June 4, 2017

உலகை மிரட்டும் ரஷ்யாவின் புதிய ஏவுகணை! விமான தாங்கி கப்பல்களை அழிக்கத் திட்டம்!

ஒற்றை தாக்குதலில் அழிக்கும் திறன் கொண்ட அதிவேக ஏவுகணை ஜெட் விமானத்தை ஐந்து முறை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Zircon cruise என்ற ஏவுகணை மணிக்கு 3800 கிலோ மீற்றர் வேகம் மற்றும் 4600 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
ரஷ்யாவின் அணுவாயுத ஆற்றல் அரை தசாப்பதற்கு முன்னால் செயற்படுவதாக அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அடுத்த இரு தசாப்தங்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் ஏவுகணைகளை விடவும் இந்த ஏவுகணை அதிக வேகத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவில் ஆயுத சோதனைகள் ஏற்கனவே நடந்து வருவதாக ரஷ்ய இராணுவ ஆய்வாளர் Vladimir uchkov தெரிவித்துள்ளார்.
புதிய அணுவாயுதங்கள் 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ரஷ்யாவின் பயன்பாட்டு ஆயுதங்களுடன் இணைத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
மேக் 6 ஏவுகணை வேகமானது எந்தவொரு எதிர்ப்பு ஏவுகணைகளையும் சமாளிப்பதற்கு போதுமான உத்தரவாதத்தை விடவும் அதிக திறன் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 'தடுக்க முடியாத' ஏவுகணைகள் பாரிய பேரழிவை ஏற்படுத்தும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தடையற்ற இந்த ஏவுகணை விமானம் கடற்படையின் 6.2 பில்லியன் பவுண்ட் பெறுமதியான விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே உலகின் மிக சக்தி வாய்ந்த இராணுவம் என பெருமையை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா தனது வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்காக வருடாந்தம் 600 பில்லியன் டொலர் நிதியை செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment