தொலைக்காட்சி!!

Tuesday, June 13, 2017

இந்த உலகில் நீங்கள் மட்டுமே ஆட்சி செய்ய அனுமதிக்கமாட்டோம், நாங்கள் எங்கும் ஓடிவிடமாட்டோம் -ஆண்களுக்கு பெண்ணின் எச்சரிக்கை !?

பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு முதல் காரணமாக குறிப்பிடுவது அவர்களது ஆடைகளை தான்.
இதுமட்டுமல்லாது நடிகைகள் முதற்கொண்டு பெண்களின் ஆடைகள் குறித்த ட்ரோல்களும் வராமல் இல்லை.
சமீபத்தில் கூட மோடியை சந்தித்த பிரியங்கா சோப்ராவின் ஆடை, ரமலான் மாதத்தில் நடிகையின் நீச்சல் உடை என ட்ரோல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக Mirror Now என்ற தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற இஸ்லாமிய மதகுருவான மௌலானா யூசூப் அபாஸ் என்பவர், தொகுப்பாளரை நோக்கி நீ உள்ளாடை அணிந்துகொண்டு வந்து விவாதம் செய், ஆண்களுக்கு நிகராகிவிடுவாய், சமத்துவம் ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய தொகுப்பாளர் ஃபயே டிசௌசா, அவர் கூறிய கருத்தால் நான் ஆவேசமடைவேன் என கருதியிருப்பார். நான் நிலை தடுமாறி வேலையை ஒழுங்காக செய்யமாட்டேன் என நினைக்கிறார்.
உங்களை போன்று பலரையும் பார்த்துள்ளேன், சனா ஃபாத்திமா, சானியா மிர்சா மற்றும் பல பெண்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள்.
அவர்களின் உடைகளையும் அவர்களையும் விமர்சித்தால், நடுங்கிப்போய் சமையலறைக்குள் ஓடிவிடுவார்கள் என நினைக்கும் ஆண்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
இந்த உலகில் நீங்கள் மட்டுமே ஆட்சி செய்ய அனுமதிக்கமாட்டோம், நாங்கள் எங்கும் ஓடிவிடமாட்டோம் என பதிலடி கொடுத்துள்ளார்.
http://news.lankasri.com/india/03/126965?ref=right_featured

No comments:

Post a Comment