தொலைக்காட்சி!!

Saturday, May 27, 2017

இறந்தே பிறந்த குழந்தை, தாயினால் உயிர் பெற்ற அதிசயம்! என்ன நடந்தது தெரியுமா? - See more at: http://www.manithan.com/news/20170526127302?ref=rightsidebar-tamilwin#sthash.lo5aPGeO.dpuf

தாய், தந்தையின் பாசம் எல்லை இல்லாதது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இங்கே ஒரு தாய் தந்தையினரின் பாசம் இறந்த குழந்தையை பிழைக்க வைத்திருக்கிறது என்றால் அது ஆச்சரியமானதாக தான் உள்ளது.
மூன்று வருட முயற்சி
மூன்று வருடங்களாக குழந்தைக்காக முயற்சி செய்த கேட் மற்றும் டேவிட் ஓக் என்ற தம்பதியர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க போகிறது என்பது தான் அந்த ஆச்சரியம். ஆனால் இவருக்கு 14 வாரங்கள் முன்னதாகவே பிரசவ வலி வந்துவிட்டது.
கடினமான பிரசவம்
அவருக்கு பிறக்க போவது இரட்டையர்கள் என்றும் அதில் ஒன்று பெண் குழந்தை என்றும் மற்றொன்று ஆண் குழந்தை என்றும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.
டெலிவரி அறையில் இருந்த மகிழ்ச்சி மாறியது, ஏதோ தவறாக நடப்பதை அவர்கள் உணர்ந்தனர். டாக்டர்களின் கவனம் பிறந்த சின்ன ஆண் குழந்தையின் மீது திரும்பியது.
தவறிய ஆண் குழந்தை
நீண்ட நேரம் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் உங்கள் ஆண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க இருக்கிறீர்கள் என கேட்டனர். ஜேமி என்று அவர் பதிலளித்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் பூகம்பம் போல ஒரு செய்தி அவரது காதில் கேட்டது. உங்கள் மகன் ஜேமியின் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரிந்துவிட்டது என்று.
நம்பிக்கை
பின்னர் தன் குழந்தையை வாங்கிக்கொண்டு மருத்துவர்கள் அனைவரையும் அறையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார் கேட்.
பின்னர் தன் கணவரிடம் ஆடைகளை கழற்றி விட்டு தனது படுக்கையில் வந்து தன் குழந்தைக்கு உடலின் சூட்டை தருமாறு கேட்டார். அதன் படியே டேவிட் செய்தார். தனது இதயத்தின் ஓசை குழந்தையின் காதில் விழும்படி மார்போடு குழந்தையை அணைத்து கொண்டு தன் உடலின் சூட்டை குழந்தைக்கு கொடுத்தார்.
தேக்கி வைத்த அன்பு
பின்னர் தனது மகன் ஜேமி உடன் பிறந்த அவனது சகோதரி எமிலியை பற்றி கூறினார். எமிலி நன்றாக இருக்கிறாள். நீ எமிலியை பார்க்க வேண்டும் என்றும், ஜேமிக்காக வைத்திருக்கும் திட்டங்கள் பற்றியும், அவன் மீது கொண்ட காதல் பற்றியும் கூறினார்கள்.
கவலையும் படபடப்புமாக இருந்த பெற்றோர்களுக்கு ஏதோ ஒரு அசைவு தென்பட்டது. ஜேமி அசைவது தெரிந்தது. டேவிட் ஓக் தனது மகனை இன்னும் தன் உடன் சேர்த்து அணைத்துக் கொண்டார்.
உயிர் பிழைத்த குழந்தை
பிறகு ஒரு எதிர்பாராத நேரத்தில் ஜேமி தனது கண்களை திறந்தான். டேவிட்டின் கைகளை தனது பிஞ்சு விரல்களால் பற்றிக்கொண்டான். இந்த நேரம் அந்த ஜோடிகளை உற்சாகத்தின் உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றது. ஜேமி தனது தாயின் மார்பில் படுத்துக்கொண்டு தன் தந்தையின் கைகளை பற்றிக்கொண்டான்.
கட்டிப்பிடி வைத்தியம்
இறந்த குழந்தை பிழைத்தது என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம். கேட் சருமத்துடன் சருமம் சேர்த்து அணைப்பதால் உண்டாகும் ஆச்சரியம் பற்றி அறிந்திருந்ததால் ஜேமி உயிர் பிழைத்தான். அவனது தாய் தந்தையின் உடல் சூடு மரணத்தோடு போராடு மீண்டு வரும் தைரியத்தை அவனுக்கு கொடுத்தது.
ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகள்
ஜேமி மற்றும் எமிலிக்கு இப்போது ஐந்து வயதாகிறது. மேலும் இவர்களுக்கு புதிதாக ஒரு தம்பி ஜார்லி பிறந்துள்ளான். மேலும் இந்த இரட்டை குழந்தைகளும் இப்போது எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு உதவி
இப்போது டேவிட் ஓக்ஸ் நோய்வாய்பட்டு பிறக்கும் குழந்தைகளுக்காக நிதி திரட்டி உதவி செய்து வருகிறார்.
- See more at: http://www.manithan.com/news/20170526127302?ref=rightsidebar-tamilwin#sthash.lo5aPGeO.dpuf

No comments:

Post a Comment