தொலைக்காட்சி!!

Tuesday, May 9, 2017

அமெரிக்காவில் ஆசிய நாட்டவர் படுகொலை

அமெரிக்காவில் சிகரெட் கொடுக்க மறுத்த இந்தியர் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜகஜீத் சிங்(32) என்ற நபர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறி வசித்து வருகிறார்.
இவரது குடும்ப உறுப்பினர்கள் பிரான்ஸ் நாட்டில் குடியேறியுள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Modesto நகரில் மனைவியுடன் வசித்து வந்த ஜகஜீத் அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நபர் ஒருவர் கடைக்குள் வந்து சிகரெட் பாக்கெட் ஒன்றை கேட்டுள்ளார்.
சிகரெட் பாக்கெட்டை பெற அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்பதால் அதனை ஜகஜீத் கேட்டுள்ளார்.
ஆனால், வாலிபர் அடையாள அட்டையை காட்டாமல் ஜகதீத்துடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இக்காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
சில நிமிடங்களுக்கு பிறகு கோபத்துடன் வெளியேறிய வாலிபர் ‘இன்று இரவுக்குள் உன்னை தீர்த்து கட்டுகிறேன்’ என உரக்க கூறிவிட்டு அங்கிருந்து வாலிபர் சென்றுள்ளார்.
வாலிபரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ஜகதீத் பணி முடிந்ததும் வெளியே சென்றுள்ளார்.
அப்போது, திடீரென அங்கு வந்த சிலர் ஜகதீத்தை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜகதீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவிற்கு சென்ற மகன் உயிரிழந்ததை அறிந்து பெற்றோர் அலறி துடித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக ஜகதீத் மீது தாக்குதல் நடத்திய நபர்களை அமெரிக்க பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
http://www.canadamirror.com/canada/86986.html
punjab_men

No comments:

Post a Comment