தொலைக்காட்சி!!

Saturday, April 8, 2017

இழிவாக பேசினார்கள்:கண்ணீர் மல்க பேசிய நந்தினியின் உருக்கமான ஓடியோ

பிரபல சின்னத்திரை நடிகையான நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தனியார் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார்.
கார்த்திக்கின் தற்கொலைக்கு நந்தினி தான் காரணம் என்று அவரது பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால் நந்தினியோ தான் கார்த்திக்கை உண்மையாக காதலித்தேன். ஆனால் அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் கார்த்திக் குறித்து பேசிய ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் கார்த்திக்கை பார்க்கப்போனதாகவும், ஆனால் அவர்கள் அங்கு தன்னை பார்க்கவிடவில்லை எனவும், தன் நண்பர்கள் எல்லாம் கூறினார்கள் அதையும் அவர்கள் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னை இழிவாக வேற பேசினார்கள் எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

http://news.lankasri.com/cinema/03/122940?ref=right_featured

No comments:

Post a Comment