தொலைக்காட்சி!!

Friday, April 7, 2017

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கை தமிழர்களுக்கு பிரச்சனையா?

இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு வேலை பார்க்கின்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைப்பதே நல்லிணக்க பிரிவின் முக்கிய நோக்கமாகும்.
நல்லிணக்க பிரிவின் முக்கிய சேவை குறிக்கோள்
இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு பணிபுரிய செல்லும் ஊழியர்களுக்கு அங்கு ஏதாவது பிரச்சனையோ, முறைப்பாடுகளோ இருந்தால் அவர்கள் நேரடியாகவோ அல்லது நெருங்கிய உறவினர்கள் மூலமோ அதை தெரிவிக்கலாம்.
இதற்கு பிரதிநிதித்துவ பணியகத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் பதிய வேண்டும்.
அதாவது,
தேசிய அடையாள அட்டை இலக்கம்
வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம்
வெளிநாட்டில் வாழ்வோரின் பெயர்கள்
வெளிநாட்டில் வாழும் நாடு
வெளிநாட்டுக்குச் சென்ற திகதி
மேற்கூறிய தகவல்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பிரச்சனை என்னும் பட்சத்தில் மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும், தகவல்கள் சரியாக இருந்தால் முறைப்பாட்டை குறித்த பிரிவுக்கு அனுப்பி தீர்வு காணப்படும்.
- See more at: http://www.manithan.com/news/20170407126230?ref=builderslide#sthash.KwUTojRH.dpuf

No comments:

Post a Comment