Friday, April 21, 2017

அமெ­ரிக்க போர்க் கப்­பல்­களை செய­லற்­ற­தாக்கும் வல்­லமை ரஷ்­யா­விடம் உள்­ள­தாக உரிமை கோரும் அந்­நாட்டு ஊடகம்

ரஷ்ய இரா­ணு­வ­மா­னது இலத்­தி­ர­னியல் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் உப­க­ர­ணங்கள் மூலம் அமெ­ரிக்க போர்க் கப்­பல்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்கக் கூடிய வல்­ல­மையை தற்­போது கொண்­டுள்­ள­தாக ரஷ்ய ஊடகம் உரி­மை­கோ­ரி­யுள்­ளது.
அமெ­ரிக்க நாச­காரி கப்­ப­லான யூ.எஸ்.எஸ். டொனால்ட் குக் பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் கருங்­க­டலில் பய­ணித்த போது, ரஷ்ய விமா­ன­மொன்றின் மூலம் மேற்­படி இலத்­தி­ர­னியல் போர் முறைமை தொழில்­நுட்பம் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அந்தக் கப்­ப­லா­னது செயற்­பட முடி­யாத நிலைக்­குள்­ளா­ன­தாக அந்த ஊடகம் தெரி­விக்­கி­றது.
அந்த வகையில் எந்­த­வொரு கப்­ப­லி­லி­ருந்தும் ராடர் கரு­வி­யி­லி­ருந்தும் செய்­ம­திக்கு அனுப்­பப்­படும் சமிக்­ஞையை கண்­ட­றிந்து அதனை குறுக்­கீடு செய்து செய­லற்­ற­தாக்கும் வல்­ல­மையை ரஷ்யா கொண்­டுள்­ளதால் அந்தக் கப்­பல்கள் தமது இலக்­கு­களை அடை­யாளம் கண்டு தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வது சாத்­தி­ய­மற்­ற­தாகி விடும் என அந்த ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.
ரஷ்­யாவின் இந்த பிந்­திய இலத்­தி­ர­னியல் போர் உப­க­ரணத் தொகு­தி­யான கிபி­னியை உள்­ள­டக்­கிய அந்­நாட்டு விமா­ன­மா­னது அதி சக்தி வாய்ந்த இலத்­தி­ர­னியல் அலை­களைப் பிர­யோ­கித்து போர்க் கப்­பல்­களின் இலத்­தி­ர­னியல் முறை­மை­க­ளையும் சமிக்­ஞை­க­ளையும் கண்­ட­றிந்து செய­லற்­ற­தாக்கும் வல்­ல­மையைக் கொண்­டுள்­ள­தாக அந்த ரஷ்ய ஊடகம் தெரி­வித்­துள்­ளது.
“போர் ஒன்றில் வெல்­வ­தற்கு விலை­யு­யர்ந்த ஆயு­தங்கள் தேவை­யில்லை. அதி­சக்தி வாய்ந்த வானொலி இலத்­தி­ர­னியல் நெருக்­கடி முறைமை போது­மா­ன­தாகும்” என அந்த ஊடகம் உரி­மை­கோ­ரி­யுள்­ளது.
இந்த இலத்­தி­ர­னியல் நெருக்­கடி முறை­மை­யா­னது அமெ­ரிக்க கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் என்பவற்றில் பொருத்தப்பட்டுள்ள இலத்திரனியல் உபகரணங்களை முழுமையாக செயலற்றதாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் அவை செயற்பட முடியாத நிலைக்குள்ளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.jvpnews.com/srilanka/231248.html

No comments:

Post a Comment