Sunday, April 2, 2017

கருவேல மரத்தை விட கொடிய மரம் ஒன்றை நாம் பயிர் செய்கிறோம் என்றால் நம்புவீர்களா?

ஆர் எஸ் பதி மரம் (யூக்கலிப்டஸ் மரம்)
இன்று தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏறதாள அனைத்து மாவட்டங்களிலும் ஏதாவது சில பகுதிகளிலாவது இந்த மரம் பயிர் செய்து வருகிறார்கள்.
காரணம்
  • செடி நட்ட சில நாட்களுக்கு தண்ணீர் விட்டால் போதும்
  • பராமரிப்பு செலவு குறைவு
  • பயிர் பாதிப்பு, பூச்சி தாக்குதல் பாதிப்பு என்ற கவலை குறைவு
  • ஒருமுறை நட்டால் பல முறை மறு சுழற்சி செய்யலாம்
  • மரம் நல்ல விலை போகிறது
ஆனால் இதன் பல மடங்கு பாதிப்புகள் சீமை கருவேல மரங்களை விட பல மடங்கு தண்ணீர் உறுஞ்சும் தண்மை கொண்டது அதன் வேர் மிக ஆழமாக சென்று மண்ணையும் நீர் வளத்தையும் குறைக்க கூடியது இந்த மரத்தை நட்டுள்ள பகுதிகளில் காற்றின் ஈர பதத்தை உறுஞ்சும்.
அதனால் வெப்ப நிலை அதிகரிக்கும் நாளடைவில் இது பயிரிட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து மழையின் அளவை குறைக்க கூடியது இருக்கும் நீரையும் எடுத்து கொண்டு இனி பெய்யவிருக்கும் மழையையும் குறைக்கும்.
நமது முன்னோர் செய்யாத ஒன்றை நாம் செய்யும் போதே தெரியவில்லையா??? இதில் கண்டிப்பாக ஏதோ குறை உள்ளதென்று. பிறகு எப்படி இந்த மரம் தமிழ்நாட்டிற்கு வந்தது? இந்த மரத்தின் மிக பெரிய இராட்சத மரங்களை நம் மாநிலத்தின் குளிர் மிகுந்த மாவட்டங்களான நீலகிரி (ஊட்டி) கொடைக்கானல் போன்ற மலை தொடர்களில் காணலாம் .
அங்கு நிழவும் குளிரின் தாக்கத்தை குறைக்க வெள்ளைகாரர்கள் நட்டு வைத்த மரங்கள் தான் அது. அங்கு காற்றில் இருக்கும் ஈர பதத்தை குறைத்து குளிரின் தாக்கத்தை குறைத்து வெப்பத்தை அதிகரிக்க உதவும். இந்த மரம் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்று தெரியவில்லை.
- See more at: http://www.manithan.com/news/20170402126120?ref=builderslide#sthash.YbFNjiJQ.dpuf

No comments:

Post a Comment