தொலைக்காட்சி!!

Wednesday, March 29, 2017

வீங்கிய நிலையில் கிடந்த மலைப்பாம்பு: வயிற்றுக்குள் இருந்து வெளியே வந்த நபர்

இந்தோனேஷியாவில் காணாமல் போன இளைஞர் ஒருவர் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுலவேசி தீவை சேர்ந்த அக்பர் சலுபிரோ என்பவர் தனது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று அந்த பக்கமாக வந்துள்ளது.
அக்பரை அந்த பாம்பு சூழ்ந்துகொண்டபோது, தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக அவர் போராடியபோதும் பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொண்டார். அக்பரை அந்த பாம்பானது விழுங்கியுள்ளது.
இந்நிலையில் நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாத அக்பரை அவரது உற்றார் உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதற்கிடையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் அக்பர் வீட்டின் பின்பக்கத்தில் மலைப்பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் இருப்பதை பார்த்துள்ளனர்.
பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது, அதில் அக்பரின் உடல் இருந்தை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://news.lankasri.com/othercountries/03/122259?ref=lankasritop

No comments:

Post a Comment