தொலைக்காட்சி!!

Sunday, March 19, 2017

திரு.கிருஷ்ணராஜ் ராய் காலமானார்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வாரம் அவரின் நிலைமை கவலைக்கிடமானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணராஜ் ராய் உயிரிழந்தார். ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் செல்லம். எதுவாக இருந்தாலும் தந்தையிடம் தான் முதலில் கூறுவார். இந்நிலையில் தந்தையின் பிரிவால் அவர் மிகுந்த சோகத்தில் உள்ளார். கிருஷ்ணராஜ் ராய், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted Date : 21:07 (18/03/2017)


http://www.vikatan.com/news/india/84005-aishwarya-rais-father-krishnaraj-rai-passes-away.html


No comments:

Post a Comment