தொலைக்காட்சி!!

Friday, February 24, 2017

அமரர் மாலதி ஜெகநாதன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி!!

மலர்வு : 30 செப்ரெம்பர் 1996 — உதிர்வு : 7 மார்ச் 2016

திதி : 25 பெப்ரவரி 2017

நெதர்லாந்து Den Haag ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாலதி ஜெகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும்
மாறாது எம் துயர்
மறவாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
என் அருமை மகளே! மாலாம்மா!!
உன் அம்மா மனம் பரிதவிக்க!
அப்பா உள்ளம் சோர்ந்து நிற்க
உற்றார் உறவினர் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கே போனாய்?
என் மாலாக்குட்டி
உன் அன்பான மலர் முகம்
அழகன முல்லைச் சிரிப்பு
எங்கள் நெஞ்சை வாட்டி வருடுகிறதம்மா!
அன்பின் திருவுருவே! அறிவின் பொக்கிஷமே!!
ஆண்டு ஒன்று உருண்டோடிச் சென்றதுவோ மாலாம்மா,
பூவிலும் மென்மையான  உன் அழகு மனம்
தேனிலும் இனிமையான இன்பக் குரலும்
ஏங்கித்தவிக்கும் எம் காதில்
ஒலித்து கொண்டே இருக்குதம்மா!
உன் மென் விரல்கள் படாமல்
உன் இசைக் கருவிகளும், பேனா, பென்சில், கொப்பி, புத்தகம்
அனைத்தும் சோர்ந்து மெளனம் காக்கின்றது
தினம் தினம் பாய்கிறது அருவி எம் கண்களில்
காலனவன் கொடியவனே! அறியானோ?
காலம் வரும் முன்பே உன்னைக்
கடத்திக் கொண்டு போனானோ!
நீர் என்றும் உயர்ந்து வாழ்வீர் என்று
எண்ணியிருந்த கனவு நனவாகும் வேளை
காலன் வந்து உம்மைக் கவர்ந்த மாயம் என்ன?
ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர் வந்தாலும் ஆறமுடியவில்லை
தினம் தினம் கொஞ்சிப் பேசியதும்,
சிரித்து விளயாடியதும் நீங்காத நினைவோடு
நின்று துடிக்கிறேன் மாலா!!
உன் அறை எங்கும் இன்ப ஒலி கேட்டு
மகிழ்ந்திருந்த மனையில் யார் கண் பட்டதோ
இப்போ அழும் குரல் தானே ஒலிக்கின்றது!
பண்பிலும், அன்பிலும் தான தர்மத்திலும்,
உனக்கென யாரும் இல்லா வாழ்வு
அது நிஜம் இல்லை என உணர்ந்தோம் உன் இழப்பால்
எங்கள் மூச்சுத் தொட்டிலிலே 
மாலா உன்னை குழந்தையாக்கி ஏந்தியிருப்போம்.

மாலாக்குட்டி!! 
என்றும் எங்களின் ஒளி விளக்காய்
ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றாய் அம்மா
நித்தம் கலங்கி நிற்கும் இதயத்துக்கு
ஆறுதல் தர வாரும் அம்மா!!

எங்கள் வாழ்க்கைப் பயணத்துக்கு
பக்கபலமாக நின்ற என் செல்ல மகளே!
பாதி வாழ்க்கையில் வாழ்வை முடித்துக் கொண்டு சென்றதெங்கே?
ஆண்டு ஒன்று ஓடியும் எங்கள் ஈரவிழிக் கண்ணீர் ஓயவில்லை
பூவுக்கு வாசம் தந்தவளே பூவுலகை விட்டு
விண்ணுலகம் விரைந்ததேனோ?
உன் பாச உறவுகள் இங்கு தானே இருக்கின்றோம்
எப்படி மாலா எங்களை விட்டுப் போகத் துணிவு கொண்டாய்!
நோய் வடிவில் வந்த காலன் உம்மைக் கூட்டிப் போனானோ?
எங்கள் இதயத் துடிப்பில் அன்பு கொண்ட வதனம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம் மாலாம்மா!!
எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உம் நினைவு  நெஞ்சை விட்டு!

உமது ஆத்மா சாந்தியடைய
எழுவை முருகனை வேண்டுகின்றோம்.
உன் பாதத்தில் பணிந்து கிடக்கும்
அன்பு அப்பா அம்மா ஜெகன் ராசாத்தி (நெதர்லாந்து)
25-02-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
http://www.kallarai.com/ta/remembrance-20170220103650.html

No comments:

Post a Comment