தொலைக்காட்சி!!

Tuesday, December 27, 2016

பெற்றோர்களுக்கு சரியான நெத்தியடி கொடுத்த சூர்யா!

திருமணமான ஆண்- பெண் வாழ்வில் முழுமை அடைகிறார்கள் என்றால் அது குழந்தை பேறுக்கு பின்னர் தான்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் சூட்டுவது, வளர்ப்பது என படு பிஸியாகிவிடுவார்கள்.
2- 3 வயது ஆனவுடன் தரமான கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளிக்காக பெற்றோர்கள் படாதபாடுபடுவதுண்டு.
இதற்காக லட்சங்களை கூட செலவழிக்க தயாராகவும் இருப்பார்கள், வகுப்பில் முதலிடம் வரவேண்டும் என்பதற்காக டியூஷனுக்கு அனுப்புவது, எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ் என்பதற்காக நீச்சல், நடனம், இசை, பாடல் என அனைத்திலும் சேர்த்து விடுவார்கள்.
இதுமட்டுமா இன்று பெரும்பாலும் குழந்தைகளை Day Care-ல் விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் ஏராளம்.
அதிலும் ஒருபடி மேலேபோய் உறைவிட பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள். இது சரியான சாய்ஸா?
படிப்பை எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர வேண்டுமாம், அவர்களது மனநிலை என்னவென்று சிந்தித்து பார்த்திருப்போமா.
தாய்- தந்தை- உடன்பிறப்புகள்- நண்பர்களுடன் இருக்கும் அந்த தருணங்கள் அவர்களுக்கு திரும்ப கிடைக்குமா?
வெறும் கல்வி மட்டும் அவர்களது எதிர்காலத்தை முடிவு செய்ய முடியுமா? என்னதான் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தாலும் அனுபவ பாடங்களே அவனது வாழ்விற்கு முக்கியமான ஒன்று.
வாழும் சூழல், கற்றுக் கொடுக்கும் பாடங்கள், பெற்றோர்களின் அறிவுரை என அனுபவ பாடங்களே கடைசி வரையும் அவர்களது வெற்றிக்கு உதவும்.
கஷ்டமான சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதை அவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
உடல்நிலை சரியில்லை என்றால் சரிசெய்துவிடலாம், ஆனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டால்?
பிற்காலத்தில் புலம்பி தவித்து ஒன்றும் சீராகி விடாது, குழந்தைகளுக்கு என்று மனது இருக்கிறது, அவர்கள் நீங்கள் ஆட்டிப்படைக்கும் மெஷின்கள் அல்ல என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த கருத்தையே தான் சூர்யாவின் புரொடக்ஷனில் உருவான பசங்க-2 படமும் பிரதிபலித்துள்ளது.

No comments:

Post a Comment