தொலைக்காட்சி!!

Thursday, December 1, 2016

யாழில் இளைஞனுக்கு எமனாக வந்த சூறாவளி!


யாழ். குடாநாட்டில் இன்று (01) அதிகாலை முதல் சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையுடனான காலநிலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் திடீரென்று சரிந்து விழும் நிலையும் தொடர்கின்றது.
குறித்த நிலையில், யாழ்.சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் வீதியால் சென்றவர் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த இளைஞன் சங்கத்தானை பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் கஜந்தன் (வயது31) என கூறப்படுகின்றது.
மேலும், புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் 30 கிலோ மீற்றர் தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகம் வரையில் காணப்படும் எனவும், தற்போது வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/weather/01/126636

No comments:

Post a Comment