தொலைக்காட்சி!!

Friday, December 23, 2016

புத்தாண்டுப் பலன்கள் 2017… கணித்தவர் : ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்!

புத்தாண்டுப் பலன்கள் 2017… கணித்தவர் : ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்!
மேஷம்
மந்திரி முதல் அடி மட்டத் தொண்டன் வரை அனைவரின் திரைமறைவு வேலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசுவதால் உங்களை சிலர் அரைக் கிறுக்கன் என்பார்கள். தாயா, தாரமா என்ற தடுமாற்றம் உங்களுக்கு அடிக்கடி வரும். சடங்கு, சம்பிரதாயங்களை விட சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். உங்களின் சுகாதிபதி சந்திரன் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்கும்போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் லாப வீட்டில் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். 16.1.2017 வரை ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நிற்பதாலும், 17.1.2017 முதல் 26.2.2017 வரை ராசிக்கு பன்னிரெண்டில் மறைவதாலும் முன்கோபம்இ ரத்த சோகை, சகோதரர்களுடன் மனக் கசப்புகள், சிறுசிறு நெருப்புக் காயங்களெல்லாம் வந்துபோகும். 11.4.2017 முதல் 26.5.2017 வரையுள்ள காலகட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாயை சனி பார்ப்பதால் சிறுசிறு விபத்துகள், பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்துபோகும்.
26.7.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து நின்று போராடி சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4ம் வீட்டிலும், கேது 10லும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைபளு இருந்து கொண்டேயிருக்கும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் பணப் பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும். ஆனால், 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்கயிருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். ஆரோக்யம் சீராகும். அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும். 14.12.2017 வரை சனி 8ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்துபோன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் வெளியூருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து விட்டுச் செல்லுங்கள். வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 9ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். மற்றவர்களின் மனநிலையைப் புரிந்து பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.
வியாபாரிகளே! இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். என்றாலும் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். எனவேஇ பல நாட்கள் நீங்களே தொழிலாளியாகவும்இ முதலாளியாகவும் இறங்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிய வேலையாட்களை பணியில் அமர்த்தும்போது விசாரித்துச் சேர்ப்பது நல்லது. அவர்களுக்கு அதிகத்தொகை முன்பணமாக தர வேண்டாம். வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் கடையை மாற்றுவதுஇ விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி பிளாஸ்டிக், புரோக்கரேஜ், மின்சார சாதன வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! உங்களின் உத்யோக ஸ்தானாதிபதி சனி 8ல் நீடிப்பதுடன், ஜூலை 27ம் தேதி முதல் கேது உத்யோக ஸ்தானத்தில் அமர்வதாலும் கூடுதலாக வேலை பார்க்க வேண்டியது வரும். அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் இடையூறுகளை சமாளிக்க வேண்டியது வரும். ஆனாலும், செப்டம்பர் மாதம் முதல் வேலைச்சுமை குறையும். மறுக்கப்பட்ட உரிமைகளும் கிடைக்கும். இடமாற்றமும் கிட்டும்.
கன்னிப் பெண்களே! செப்டம்பர் மாதம் முதல் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரனும் அமையும். என்றாலும், தோலில் தடிப்பு, தேமல், தூக்கமின்மை வந்து செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானதுதான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
மாணவ மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது. அறிவியல்இ கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்த்து நினைவில் நிறுத்துவது நல்லது. விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகளில் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.
கலைத்துறையினரே! விமர்சனங்களும், கிசுகிசுத் தொந்தரவுகளும் வந்தாலும் அஞ்ச வேண்டாம். உங்களைவிட வயதில் குறைந்த கலைஞர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள்.
அரசியல்வாதிகளே! போட்டி, பொறாமையால் தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கவனமாக இருங்கள். வருடத்தின் பிற்பகுதியில் மாநில அளவில் பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகளே! விளைச்சல் சுமாராக இருக்கும். அக்கம் பக்கத்து நிலத்துக்காரர்களிடம் தகராறு வேண்டாம். சின்னச் சின்ன பிரச்னைகளையும் பேசி தீர்க்கப் பாருங்கள். வழக்கு, வியாஜ்யம் என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். எண்ணெய் வித்துக்கள்இ சிறு தானிய வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்த 2017 ம் ஆண்டு கரடு, முரடான பாதைகளில் உங்களை பயணிக்க வைத்தாலும் அனுபவ அறிவாலும்இ சமயோஜித புத்தியாலும் ஓரளவு முன்னேற்றுவதாக அமையும்.
பரிகாரம்:
மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் குத்தாலத்திற்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
ரிஷபம்
வெகுதொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில் கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றலை கொண்ட நீங்கள், நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள். உங்களுடைய சப்தமாதிபதி செவ்வாயும், ராசிநாதன் சுக்கிரனும் 10ம் வீட்டில் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் வருடத்தின் தொடக்கமே கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். வருடப் பிறப்பு முதல் 16.1.2017 வரை செவ்வாயும்இ 27.1.2017 வரை ராசிநாதன் சுக்கிரனும் கேதுவின் பிடியில் சிக்கியிருப்பதால் தொண்டைப் புகைச்சல் சளித் தொந்தரவு, அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துபோகும். 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயை சனி நேருக்குநேர் பார்க்கயிருப்பதால் இக்காலகட்டத்தில் மனைவிக்கு தலைச்சுற்றல், மூட்டுவலி, முன்கோபம், வேலைச்சுமை வந்துபோகும். அவருடன் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.
சந்திரன் உங்களது ராசிக்கு 9ம் வீட்டில் நிற்கும்போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் முடிவடையும். அரைகுறையாக நின்ற வீடுகட்டும் பணியை தொடங்குவீர்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10ல் கேதுவும்இ 4ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னைஇ மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். ஜூலை 27ம் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள்இ மூட்டுவலி வந்து செல்லும்.
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். ஆனால்இ ராகு 3ம் வீட்டில் அமர்வதால் பயம்இ படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில் தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் வலியவந்து பேசுவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வேற்றுமதம்இ மொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.
1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள்இ அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். உறவினர்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஆனால் 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக வருவதால் சின்னச் சின்ன காரியங்களைக்கூட இரண்டுஇ மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும்.
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்டவிதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள்இ ஏமாற்றங்கள்இ தோல்விகளை நினைத்து அவ்வப்போது தூக்கம் குறையும். உங்களை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 7ல் நின்று கண்டகச் சனியாகவும்இ வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்இ நகச்சுத்திஇ முடி உதிர்தல்இ அலர்ஜி வந்து நீங்கும்.
வியாபாரிகளே! போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். சின்னச் சின்ன நஷ்டங்கள் இருக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். பிப்ரவரிஇ ஜூலைஇ ஆகஸ்ட் மாதங்கள் உங்களுக்கு ஆதாயம் தரக் கூடியதாக இருக்கும். உணவுஇ மருந்துஇ கட்டுமானப் பொருட்கள் நெல்மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். வேலையாட்களும் உங்களுடைய கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் பொறுப்பற்று நடந்து கொள்வார்கள். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
உத்யோகஸ்தர்களே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். ஜனவரிஇ ஆகஸ்ட்இ நவம்பர் மாதங்களில் புது வாய்ப்புகள் தேடிவரும். சம்பளபாக்கி கைக்கு வரும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்குக்கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
கன்னிப்பெண்களே! செப்டம்பர் மாதம் வரை போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வேலையும் அமையும். சிலருக்கு திருமணமும் முடியும். இந்தாண்டு முழுக்க சனியின் போக்கு சாதகமாக இல்லாததால் காதலில் ஏமாற்றமும், உயர் கல்வியில் தேக்கமும், மந்தமும் ஏற்படும்.
மாணவ மாணவிகளே! உயர்கல்வியில் அலட்சியப்போக்கு வேண்டாம். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். மந்தம்இ மறதி வந்து நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கல்வி பிரிவில் போராடி இடம் பிடிப்பீர்கள்.
கலைத்துறையினரே! மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். பெரிய நிறுவனத்திற்கென காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தப் பாருங்கள்.
அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரைவிட நீங்கள் இருக்கும் கட்சியில் உங்களுக்கு எதிர்ப்புகள் இருக்கும். சகாக்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கௌரவப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். நெல்இ கரும்பு மற்றும் கிழங்கு வகைகளால் ஆதாயமடைவீர்கள். பழைய கடன்இ பகையை நினைத்து பயம் வரும். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நிம்மதியற்றப் போக்கை தந்தாலும், இடம், பொருள், ஏவலறிந்து செயல்பட வேண்டுமென்பதை உணர்த்துவதாகவும் அமையும்.
பரிகாரம்:
தஞ்சாவூர்இ திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தி தலத்தில் அருளும் வீணாதர தட்சிணாமூர்த்தியை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மிதுனம்
இறைவனின் படைப்பில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை அறிந்த நீங்கள், பணம்இ பதவி பார்த்துப் பழக மாட்டீர்கள். எந்த நிகழ்வுகளையும் தொகுத்து கோவையாக வெளியிடுவதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் 2017ம் ஆண்டு பிறப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடுஇ வாகனம் அமையும். நீண்ட நெடுங்காலமாக தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும். வருடப் பிறப்பு முதல் 8ம் தேதி வரை உங்களுடைய ராசிநாதனான புதன் சனியுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் அலர்ஜிஇ யூரினரி இன்ஃபெக்சன்இ நரம்புச் சுளுக்குஇ சளித் தொந்தரவு வந்து போகும்.
11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாயை சனி பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள்இ பழைய கடனை பற்றிய கவலைகள்இ வீண் டென்ஷன்இ சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9ல் கேது நிற்பதால் தந்தைக்கு நெஞ்சுவலிஇ பித்தப் பையில் கல்இ சிறுநீரகக் கோளாறு வந்துபோகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர்ராஜ்ஜிய சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். ஆனால்இ மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்றுமதம்இ மாற்று மொழிப் பேசுபவர்களால் உங்களது வாழ்க்கை தரம் ஒருபடி உயரும்.
ஜூலை 27ம் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2ல் ராகுவும்இ 8ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் வீண் விரயம்இ அலைச்சல்இ பொருள் இழப்புகள் வந்து போகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் சப்தமஇ ஜீவனாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும். விபத்துகள் நிகழக்கூடும். ஆனால், 2.9.2017 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்புஇ மரியாதை கூடும். மகளுக்கு ஏதோவொரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடி வரும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தங்க ஆபரணங்கள்இ ரத்தினங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். 14.12.2017 வரை சனி பகவான் 6ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிர்ப்புகள் குறையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள்இ சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.
பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள். ஆனால்இ 15.12.2017 முதல் சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப்பேசி முடிவுகளெடுப்பது நல்லது. மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள்இ முதுகு மற்றும் மூட்டுவலி வந்துபோகும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.
வியாபாரிகளே! அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றம் அடைந்தார்களே! வட்டிக்கு வாங்கி கடையை விரிவு படுத்தி நஷ்டப்பட்டீர்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம்இ பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். கன்ஸ்ட்ரக்சன்இ பதிப்பகம்இ கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்இ ஜூவல்லரி வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்னை செய்தார்களே! இனி பணிந்து வருவார்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரரும் மீண்டும் வந்திணைவார்.
உத்யோகஸ்தர்களே! செப்டம்பர் மாதம் முதல் உங்களின் உத்யோக ஸ்தானாதிபதி குருபகவான் சாதகமாவதால் பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும். வேலைச்சுமையும் குறையும். உங்களை கசக்கிப் பிழிந்துஇ உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். சகஊழியர்
களும் மதிக்கத் தொடங்குவார்கள்.
கன்னிப் பெண்களே! அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களேஇ ஏதோ இனந்தெரியாத கவலை உங்களை வாட்டியதேஇ இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். காதல் கைக்கூடும். தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே! நமக்கு இன்னும் ஆகவில்லையே என வேதனைப்பட்டீர்களே! இனி கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்ததே! அந்தநிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள்.
மாணவ மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவிதைஇ கட்டுரைஇ இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து பெற்றோரின் தலை நிமிரும்படியாக செய்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாட்டிற்குச் சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.
கலைத்துறையினரே! மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். அரசால் ஆதாயமுண்டு. விருதுகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.
விவசாயிகளே! காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டு மாட்டிக் கொண்டீர்களே! இனி அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள்.
அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளை தலைமை ஒப்படைக்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆதாரமில்லாமல் எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். இந்த 2017ம் ஆண்டு உங்களுக்கு ஒருபக்கம் பரபரப்பான வாழ்க்கையைத் தந்தாலும்இ பிற்பகுதியில் சாதனையாளராகவும் மாற்றும்.
பரிகாரம்:
சென்னைக்கு அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூர் தலத்தில் அருளும் ஆதிகேசவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு இயன்றளவு உதவுங்கள்.
கடகம்
சாம்பார் முதல் சாட்டிலைட் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகித்துணரும் ஆற்றல் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு 7வது ராசியில் இந்த 2017ம் வருடம் பிறப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். அழகு, ஆரோக்யம் கூடும். பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி முழுமையாக முடியும். உங்களின் தனாதிபதி சூரியன் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ.இ எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வழக்கு சாதகமாகும். வருடப் பிறப்பு முதல் 16.1.2017 வரை உங்களின் யோகாதிபதி செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால் ஆரோக்ய குறைவுஇ சிறுசிறு விபத்துகள்இ சொத்துப் பிரச்னைகள்இ பொருள் இழப்புகள்இ பணப் பற்றாக்குறைஇ உடன்பிறந்தவர்களுடன் மனக் கசப்புகள் வந்து நீங்கும். 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயை சனி பார்க்க இருப்பதால் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள்இ மனஇறுக்கம்இ ஏமாற்றங்கள்இ மறைமுக நெருக்கடிகள் வந்துபோகும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும்இ 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் படபடப்புஇ எதிலும் பிடிப்பற்ற போக்குஇ பிறர்மீது நம்பிக்கையின்மைஇ வீண் விரயம் வந்து செல்லும்.
நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப்போய் பொல்லாப்பாக முடிய வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். கண்ணில் சின்னதாக தூசு விழுந்தாலும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், ஒற்றை தலைவலி, செரிமானக் கோளாறு, சிறுநீர் பாதையில் அழற்சிஇ வலிப்பு வந்து செல்லும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் சஷ்டம பாக்யாதி பதியான குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டுஇ மூன்று வேலைகளை பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். சிலர் தங்களது காரியம் ஆகும்வரை உங்களை பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்தபிறகு கறிவேப்பிலையாய் தூக்கி எறிவதை நினைத்து வருத்தப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். ஆனால்இ 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயார் கோபத்தில் ஏதேனும் பேசினாலும் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள்.
14.12.2017 வரை சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப்பற்றி நன்கு விசாரித்து முடிக்கப் பாருங்கள். மகன் காரண காரியமேயின்றி கோபப்படுவார். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொண்டால் நலமாக இருக்குமே என்று ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். மனைவிக்கு கைஇ கால் மரத்துப் போதல்இ கர்ப்பப்பையில் கட்டி வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச்சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக கோர்ட்டு, கேஸ் என்றெல்லாம் நேரத்தையும்இ பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்காதீர்கள்.
உறவினர்கள் மத்தியில் உங்களைப்பற்றி வதந்திகள் அதிகமாகும். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். சிலர் உத்யோகம்இ உயர் கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனால் 15.12.2017 முதல் 6ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். அதிக வட்டிக்கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும்.
வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். அக்டோபர்இ நவம்பர் மாதங்களில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். நண்பர்களின் உதவியுடன் கடையை விரிவுபடுத்துவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும்.
கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். கல்யாணம் சற்று தாமதமாகி முடியும்.
மாணவ மாணவிகளே! மந்தம்இ மறதி வந்து நீங்கும். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விரும்பிய பாடப் பிரிவில் கூடுதல் செலவு செய்தும்இ சிலரின் சிபாரிசின் பேரிலும் சேரவேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.
அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். எதிர்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த நவீனரக உரங்களுடன் இயற்கை உரங்களையும் பயன்படுத்துங்கள். உளுந்து, கீரை, மூலிகை வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். இந்த 2017ம் ஆண்டு அவ்வப்போது உங்களை மட்டம் தட்டப்பார்த்தாலும் விடாமுயற்சியாலும்இ கடின உழைப்பாலும் கரைத்தேற்றும்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடி பிரத்யங்கராவை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
சிம்மம்
சுருக்கென்று சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களான நீங்கள், எந்த வேலையையும் உடனே முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சமாட்டீர்கள். உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் உங்களின் நீண்டகால ஆசைகளெல்லாம் நிறைவேறும். கடினமான இலக்கையும் எளிதாக எட்டிப் பிடிப்பீர்கள். உங்களுடைய ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். ஜூலை 26ம் தேதி வரை ராசிக்கு 7ல் கேதுவும்இ உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல்இ ஹார்மோன் பிரச்னைஇ அல்சர்இ ரத்த சோகை வந்து செல்லும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ம் வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் தொடர்வதால் மனப் போராட்டங்கள் ஓயும்.
தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியாக நெருக்கடிகள் இருந்ததே, அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். 17.1.2017 முதல் 26.2.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் 8ல் மறைந்து காணப்படுவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சகோதர வகையில் சச்சரவு, ரத்த அழுத்தம்இ மனஉளைச்சல், வீண் அலைச்சல், காரியத் தடங்கல்இ வேனல் கட்டி வந்து செல்லும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்கள்இ நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.
ஆனால் 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 3ம் வீட்டிலேயே அமர்வதால் எந்த ஒரு காரியத்தையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். அவர்களிடம் உங்களுடைய பழங்கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம்.
14.12.2017 வரை சனி 4ல் நின்று அர்த்தாஷ்டமத்துச் சனியாக வருவதால் மூட்டு வலிஇ முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அன்புஇ பாசம் மிகுதியால் தாயார் ஏதேனும் உரிமையுடன் பேசினால் அதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். வீடுஇ வாகன பராமரிப்புச் செலவுகள் இருக்கும். வீட்டில் குடிநீர் குழாய்இ கழிவு நீர்குழாய் பழுது வந்துபோகும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். சிலர் வீடுஇ இடம் மாறுவீர்கள். பணப் பற்றாக்குறையும் வந்து செல்லும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருந்து கொண்டேயிருக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.
உங்களின் அடிப்படை நடத்தை கோலங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. யாருக்கும் பணம்இ நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்களும்இ வீண் பழிகளும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய சொத்து வரிஇ வருமான வரிஇ விற்பனை வரிகளையெல்லாம் கால தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். சிறுசிறு அபராதம் செலுத்த வேண்டி வரும். 15.12.2017 முதல் சனி 5ம் இடத்தில் நுழைவதால் குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி வரும். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாட வேண்டியது வரும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம்.
வியாபாரிகளே! புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்து விடலாம் என்று முடிவெடுப்பீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள்இ கான்ட்ராக்ட் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்திஇ அழகுபடுத்துவீர்கள். உணவுஇ போர்டிங்இ லாட்ஜிங்இ லெதர்இ மளிகை வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.
உத்யோகஸ்தர்களே! வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். என்றாலும் எவ்வளவு உழைத்தாலும் உங்களைப் பற்றி குறை கூறத்தான் செய்வார்கள். கவலைப்படாதீர்கள்இ கடமையை செய்யுங்கள். பழைய பிரச்னைகளை தூர்வாரிக் கொண்டிருக்காமல் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப்பாருங்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும்இ நீங்கள் நேர்ப் பாதையில் செல்வது நல்லது. சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள். வேலைசுமை அதிகரிக்கும். ஜனவரிஇ ஆகஸ்டுஇ அக்டோபர் மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தோலில் நமைச்சல்இ அடிவயிற்றில் வலி வந்து போகும். கல்யாணம் இந்த வருடத்தின் இறுதியில் முடிவடையும்.
மாணவ மாணவிகளே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தேர்வின்போது படித்துக் கொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டாதீர்கள். ஆய்வகப் பரிசோதனையின்போது கண்ணிலோஇ கையிலோ ஆசிட் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு.
கலைத்துறையினரே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப் படும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள்.
அரசியல்வாதிகளே! வெறும் அறிக்கை மட்டும் போதாது, தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். தலைமைக்கு எதிராக பேசுபவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.
விவசாயிகளே! கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த கடன் தள்ளுபடியாகும். வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். சிலர் புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். களப்பை, டிராக்டர்இ பம்பு செட் புதுசு வாங்குவீர்கள். இந்தப் புத்தாண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் இறுதியில் உங்களின்
கனவுகளை நனவாக்குவதாக அமையும்.
பரிகாரம்:
உளுந்தூர்பேட்டையில் அருளும் உளுந்தாண்டாரை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப்பணியை மேற்கொள்ளுங்கள்.
கன்னி
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காமல் கிடைத்த துரும்பை துடுப்பாக்கி கரையேறுவீர்கள். பாவ புண்ணியம் பார்க்கும் நீங்கள் யாருக்கும் மன
மறிந்து துரோகம் நினைக்காதவர்கள். இந்த 2017ம் ஆண்டு சந்திரன் உங்களின் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்கும்போது பிறப்பதால் அடிப்படை வசதிஇ வாய்ப்புகள் பெருகும். குடும்ப வருமானமும் உயரும். இந்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 6ம் இடத்திலும்இ சூரியன் நான்கில் வலுவாக அமர்ந்திருப்பதால்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். ராசிக்கு 12ம் வீட்டில் ராகு நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். சுபச் செலவுகள் அதிகமாகும்.
கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 5ம் வீட்டில் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம்இ தடுமாற்றம் வந்துபோகும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரை சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். ஒரே வாரத்தில்இ ஒரே மாதத்தில் திருத்திவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்களை கொண்டு வர வேண்டும். அதைப் புரிந்துகொண்டு செயல்படப் பாருங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால்இ ராகு 11ம் வீட்டில் நீடிப்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும்.
26.2.2017 முதல் 11.4.2017 வரை செவ்வாய் 8ல் அமர்வதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரையுள்ள காலகட்டத்தில் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சிறுசிறு நெருப்புக் காயங்கள்இ உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள்இ சொத்து வாங்குவதுஇ விற்பதில் சிக்கல்கள்இ எதிர்காலம் பற்றிய பயம்இ பணத்தட்டுப்பாடு வந்துபோகும். வருடப்பிறப்பு முதல் 8.1.2017 வரை ராசிநாதன் புதனும்இ சனியுடன் சேர்ந்து வக்ரமாகி நிற்பதால் காய்ச்சல்இ இருமல், கழுத்து வலிஇ உறவினர்இ நண்பர்களுடன் விரிசல்கள் வந்துபோகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் சேவகாதிபதியும் சப்தமாதிபதியுமான குரு உங்கள் ராசியிலேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம்இ ஈகோ பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். 2.9.2017 முதல் குரு 2ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
திருமணம்இ சீமந்தம்இ கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். சிலர் புது வீடு கட்டி குடி புகுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல்இ குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். 14.12.2017 வரை சனி 3ம் வீட்டிலேயே நிற்பதால் திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வேற்றுமதத்தவர்கள்இ மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம்இ வெளிநாடு சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் 4ல் சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாக வருவதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் பிணக்குகள் வந்து நீங்கும். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். பழைய பிரச்னைகள் போல வேறு ஏதேனும் இப்போது வந்துவிடுமோ என்று அஞ்சுவீர்கள். அரசாங்க அனுமதியில்லாத இடத்தில் வீடு கட்டவோஇ விதிகளை மீறி அடுக்குமாடிகள் கட்டுவதோ வேண்டாம். சின்னச் சின்ன அபராதம் செலுத்த வேண்டியது வரும்.
வியாபாரிகளே! பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். கல்வித் தகுதியில் சிறந்தஇ அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலைக்கு மாற்றி விரிவுபடுத்திஇ அழகுப்படுத்துவீர்கள். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரக்கூடிய பங்குதாரரும் அறிமுகமாவார். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். ஹார்டுவேர்ஸ்இ ஜூவல்லரிஇ செங்கல் சூளைஇ சிமென்ட் போன்ற வகைகளால் லாபமடைவீர்கள். ஜூன்இ செப்டம்பர்இ டிசம்பர் மாதங்களில் அயல்நாட்டு தொடர்புடைய புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களே! ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பதவி உயரும். சம்பளபாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாவார்கள். காதலும் இனிக்கும்இ கல்வியும் இனிக்கும். சிலருக்கு அயல்நாட்டில் உயர்கல்விஇ உத்யோகம் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். கல்யாணம் கூடிவரும். ஆடைஇ அணிகலன் சேரும்.
மாணவ மாணவிகளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சகமாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். கூடுதல் மொழியை கற்றுக்கொள்ள ஆசைப்படுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொகுதி மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கட்சிக்காரர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பால் சந்தோஷமடைவீர்கள். எலிகளை அழிக்கும் பாம்புகளை அடிக்க வேண்டாம். கரும்புஇ சவுக்குஇ தேக்குஇ கொள்ளு வகைகளால் ஆதாயமடைவீர்கள். புதிதாக ஆழ்குழாய் அமைப்பீர்கள். இந்த 2017ம்ஆண்டு கொஞ்சம் முணுமுணுக்க வைத்தாலும் மகிழ்ச்சியையும்இ வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
திண்டிவனத்தில் அருளும் லட்சுமி நரசிம்மரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
துலாம்
ஈரப் பார்வையால் அனைவரையும் தன்வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட நீங்கள், எல்லோரின் இயக்கங்களையும் அசைபோட்டு எடைபோடுவதில் வல்லவர்கள். போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களும் நீங்கள்தான். உங்களின் ராசிக்கு 3ம் வீட்டில் லாபாதிபதியான சூரியன் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை வரும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிக்கு 8ல் செவ்வாய் அமர்வதுடன் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் வீண் விரய செலவுகள்இ முன் கோபம்இ ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடுஇ மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து போகும்.
26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். அவர்களை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 4ம் வீட்டிலும்இ ராகு 10ம் இடத்திலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்து விடுவோமோஇ அசிங்கப்பட்டு விடுவோமோ என்ற ஒரு கவலைகளும் தலைதூக்கும். அந்தஸ்து புகழுக்காக கைக்காசை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் சேவகாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல்இ செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். தூக்கமின்மைஇ கனவுத் தொல்லைஇ ஒருவித படபடப்பு வந்து செல்லும். உறவினர்இ நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து நடத்துவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். ஆனால்இ 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஒரு தேடலும்இ நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும்.
அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென நினைப்பீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். ரத்தஅழுத்தம் அதிகமாகும். பெரியநோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். அல்சர்இ மஞ்சள் காமாலைஇ வாயுக் கோளாறால் நெஞ்சு வலிஇ யூரினரி இன்ஃபெக்சன் வரக்கூடும். 14.12.2017 வரை சனி 2ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதி கட்டமான பாதச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பல்வலிஇ காதுவலி வந்து நீங்கும். கண்பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. பணப்பற்றாக்குறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன்இ கேரன்டர் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் 3ம் வீட்டில் சனி அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். வாழ்க்கையின் நெளிவுஇ சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே குழப்பங்களை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தைரியம் கூடும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரிகளே! ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சின்னச் சின்ன நஷ்டங்களும்இ ஏமாற்றங்களும் வரும். சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பாருங்கள். முதலீடுகளையும் மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். துரித உணவகம்இ நிலக்கரிஇ இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போங்கள். ஜனவரிஇ ஆகஸ்ட்இ டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்யோகஸ்தர்களே! நாளுக்குநாள் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். வேலையில் நீடிப்போமோஇ நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது. சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள்.
கன்னிப்பெண்களே! யதார்த்தமாகவும்இ விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். தோலில் நமைச்சல்இ அடிவயிற்றில் வலி வந்து போகும். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வேலையில் சேருவது நல்லது.
மாணவ மாணவிகளே! டி.வி.இ சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். நொருக்குத் தீனிகளை குறையுங்கள். அறிவியல்இ கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கட்சி ரகசியங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். தலைமையை எதிர்த்துக்கொள்ள வேண்டாம். மாவட்டம்இ வட்டத்திடம் அனுசரித்துப் போவது நல்லது.
கலைத்துறையினரே! வருவதாக இருந்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வயதில் குறைந்த கலைஞர்களால் உதவிகள் கிடைக்கும்.
விவசாயிகளே! பூச்சித் தொல்லைஇ எலித் தொல்லைகளால் விளைச்சல் குறையும். பக்கத்து நிலத்துக்காரருடன் அனுசரித்துக் போங்கள். குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற விதைகளை விதைக்க வேண்டாம். நெல்இ மஞ்சள்இ சூரியகாந்தி வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஆகமொத்தம் இந்த 2017ம் ஆண்டு சகிப்புத்தன்மை தேவை என்பதையும் தன் கையே தனக்குதவி என்பதையும் உணர்த்தும்.
பரிகாரம்:
திருத்தணி செந்தில்வேலனை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.
விருச்சிகம்
ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்கும் நீங்கள், எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்கள். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். 26.5.2017 முதல் 12.7.2017 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 8ல் மறைவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சிறுசிறு வாகன விபத்துகள்இ மறைமுக எதிர்ப்புகள்இ பணப் பற்றாக்குறை வந்துசெல்லும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் கேது பகவானும்இ ராசிக்கு 10ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள்இ காரியத் தாமதம்இ வீண் அலைச்சல்இ டென்ஷன் வந்துபோகும்.
தாயாருக்கு கைஇ கால் வலிஇ சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப்போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடுஇ மனை வாங்குவதுஇ விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப்போய் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் தனஇ பூர்வ புண்யாதிபதியான குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ்இ கௌரவம் ஒருபடி உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர் யோகம்இ பணவரவு உண்டு. நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.
பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். தூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால்இ 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள்இ செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதர, சகோதரிகள், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
14.12.2017 வரை ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லது. வறுத்தஇ பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. தலைவலிஇ மயக்கம்இ குமட்டல்இ நாக்கில் கசப்புஇ செரிமானக் கோளாறு வந்து நீங்கும். நாக்கை கொஞ்சம் கட்டுங்கள். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது வாக்கு வாதங்கள் வரத்தான் செய்யும். அதை பெரிது படுத்த வேண்டாம். நெருங்கிய உறவினர்கள்இ நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள்இ பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
உடல் எடை கூடும். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். சிலசமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும்போது யோகாஇ தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள். வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி உங்கள் ராசிக்கு 2ல் அமர்வதால் நோய்களெல்லாம் வெகுவாகக் குறையும். குடும்பத்தில்இ கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகளெல்லாம் விலகும். ஆனால்இ பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். நிதானம் அவசியம். மூக்குஇ காதுஇ கைஇ கால் வலி வந்து போகும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
வியாபாரிகளே! ஜென்மச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள்இ பெரிய முதலீடுகள் வேண்டாம். போட்டிகளை சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களுக்காக எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும்இ அதிக சலுகைகள் தந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லையே என ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள்.வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஜனவரிஇ பிப்ரவரிஇ ஏப்ரல் மாதங்களில் தள்ளிப்போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதிஇ என்டர்பிரைசஸ்இ மரம்இ ஸ்டேஷனரிஇ கல்வி நிறுவனங்கள்இ எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! ஜூலை 26ம் தேதி வரை ராகு 10ல் அமர்வதால் சின்னச் சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறைஇ நிறைகளையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்கள் மீது சிலர் வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது.
கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். காதலை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம்.
மாணவ மாணவிகளே! ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மந்தம்இ மறதி வந்து நீங்கும். உங்களுடன் சுற்றித் திரிந்த நண்பர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறக்கூடும். எனவேஇ விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
கலைத்துறையினரே! மனம் தளராதீர்கள். சின்ன வாய்ப்பு வந்தாலும் பயன்படுத்த தவறாதீர்கள். மூத்த கலைஞர்களால் உதவிகள் உண்டு.
அரசியல்வாதிகளே! தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தொகுதி மக்களை மறக்காதீர்கள்.
விவசாயிகளே! கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி வரும். நவீனரக விதைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப் பாருங்கள். மஞ்சள்இ பூஇ கத்தரிஇ வெண்டை வகைகளால் லாபமடைவீர்கள். இந்த 2017ம் ஆண்டு சுற்றியிருப்பவர்களின் சுய நலப்போக்கை உணர வைப்பதுடன்இ மன அமைதியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சங்கரன்கோவில் கோமதி அம்மனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
தனுசு
எல்லா சம்பவங்களுக்கும் ஒரு காரணஇ காரியம் இருக்கும் என்பதை உணரும் நீங்கள், யாரிடமும் உதவி கேட்கத் தயங்குவீர்கள். அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட நீங்கள்இ அதை அடுத்தவர்களுக்காக மட்டும் பயன்படுத்துவீர்கள். உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது. எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். வருடம் பிறக்கும்போது உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் பகவான் 3ம் வீட்டில் வலுவாக நிற்பதால் மனோபலம் கூடும். புது முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆனால்இ 11.4.2017 முதல் 26.5.2017 வரை செவ்வாயை சனி பார்க்கயிருப்பதால் இக்கால கட்டங்களில் பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். ராசிக்கு 9ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமைஇ வீண் டென்ஷன் அவருடன் பிணக்குகள் வந்துசெல்லும்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்இ அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வதில் குழப்பம் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலும்இ ராகு 8ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலிஇ காது வலிஇ கணுக்கால் வலி வந்து விலகும். வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.
மறைமுக அவமானம் வந்து நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். ஆனால்இ 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்வதால் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்மனைவிக்குள் எலியும்இ பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்விஇ உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.
தாயாரின் உடல்நிலை சீராகும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடைஇ ஆபரணம் சேரும். அடகு வைத்திருந்த பத்திரம்இ பழைய கடனையெல்லாம் தீர்க்க புது வழி பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 12ல் மறைந்து விரயச் சனியாகவும்இ வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாகவும் வருவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்யாவசியச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சிலர் எப்படி யெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்து வருத்தப்படுவீர்கள்.
உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். வாயு பதார்த்தங்கள்இ கார உணவுகளை தவிர்க்கப் பாருங்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும். எனவேஇ இரும்புச் சத்துள்ள காய்இ கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். கவலைப்படாதீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி ஊக்குவிப்பீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். செப்டம்பர்இ அக்டோபர் மாதங்களில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். பவர் புராஜெக்ட்இ பதிப்பகம்இ சிமென்ட்இ மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் முக்கியத்துவம் தர தொடங்குவார்கள். மூத்த அதிகாரிகளும் உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புது அதிகாரியால் உற்சாகமடைவீர்கள். மேஇ ஜூன்இ அக்டோபர் மாதங்களில் புது வாய்ப்புகள்இ பொறுப்புகள் தேடிவரும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம் பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். உங்களுடைய திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! செப்டம்பர் மாதம் முதல் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். காதலும் இனிக்கும்இ கல்வியும் இனிக்கும். விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும்.
மாணவ மாணவிகளே! ஏழரைச் சனி தொடர்வதால் விளையாட்டுத்தனத்தை குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கணிதம்இ மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். மதிப்பெண் உயரும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.
கலைத்துறையினரே! உங்கள் புகழ் கூடும். சம்பளபாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். புதியவர்களையும் அனுசரித்துப் போங்கள். சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து நீங்கும்.
அரசியல்வாதிகளே! மாநில அளவில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின் வாரிசுகள் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் உதவுவார்கள்.
விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். இந்த 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்களை தந்தாலும் தொடர் முயற்சியாலும்இ தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும்.
பரிகாரம்:
சென்னை – திருவொற்றியூர் படம்பக்கநாதரையும்இ வடிவுடையம்மனையும் தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.
மகரம்
கற்பனையில் சிறகடித்து கதைஇ கவிதை வடிக்கும் நீங்கள் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர பறவைகள். உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள்இ குலம்இ கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்கள். உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வருடம் பிறக்கும் போதும் சூரியன் 12ல் மறைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்புகள்இ வீண் அலைச்சல்இ பழைய கடனை பற்றிய கவலைகள்இ எதிர்பாராத பயணங்கள் வந்து போகும். 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப் பார்க்கயிருப்பதால் எதிலும் ஒருவித குழப்பம்இ தடுமாற்றம்இ படபடப்புஇ நெஞ்சு வலிஇ ரத்த சோகைஇ இளைய சகோதர வகையில் அலைச்சல்இ சொத்து வாங்குவதுஇ விற்பதில் வில்லங்கம் வந்து செல்லும்.
26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் கேதுவும்இ 8ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் என்ன வாழ்க்கை இது? செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்புஇ சலிப்பு வந்து போகும். பார்வைக் கோளாறுஇ பல் வலிஇ காது வலி மற்றும் கால் வலி வந்து செல்லும். அவசர முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும்இ ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.
கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம்இ ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும். மனைவிக்கு ரத்த அழுத்தம்இ நீரிழிவு நோய்இ மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். உங்களுடைய திறமை குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோஇ நாம் மதிக்கப்படவில்லையோ என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு குழம்புவீர்கள். களவுபோக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நீடிப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். அனுபவப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். திருமணம்இ சீமந்தம்இ கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்இ நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால்இ 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 10ம் வீட்டில் அமர்வதால் அவ்வப்போது ஏமாற்றங்களை உணருவீர்கள்.
வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் தரவோஇ வாங்கவோ வேண்டாம். 14.12.2017 வரை சனி 11ம் வீடான லாப வீட்டில் தொடர்வதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தடைபட்ட காரியங்களெல்லாம் முடிவடையும். வருமானம் உயரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஹிந்திஇ தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. சிலருக்கு புதுத்தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். சங்கம்இ டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள்இ அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும்.
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடிவரும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களில் உள்ள அர்த்தத்துடன் பேசுபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால்இ வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 12ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரயச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. உங்கள் பலம்இ பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
வியாபாரிகளே! சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். ஆனால்இ தொழில் ஸ்தானமான 10ம் இடத்தில் குரு செப்டம்பர் மாதம் முதல் அமர்வதால் பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். ஜனவரிஇ அக்டோபர்இ நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்யோகஸ்தர்களே! செப்டம்பர் மாதம் முதல் குரு உத்யோகஸ்தானமான 10ல் அமர்வதால் ஒரே நேரத்தில் இரண்டுஇ மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். விரும்பத்தகாத இடமாற்றமும் இருக்கும். உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள்இ வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கன்னிப் பெண்களே! உங்களுடைய எதிர்பார்ப்புகளில் ஒரு சில நிறைவேறும். புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். என்றாலும் தோலில் தடிப்புஇ தேமல்இ தூக்கமின்மை வந்து செல்லும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்து கொள்வார்கள்.
மாணவ மாணவிகளே! தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். எல்லாம் தெரிந்ததுதானே என்று இருந்து விடாதீர்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசுஇ பாராட்டு பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களை கேட்டறிவீர்கள். யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும்.
விவசாயிகளே! விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். தோட்டப்பயிர்களால் லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலால் பதவியை இழக்க வேண்டி வரும். உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம். ஆகமொத்தம் இந்த 2017ம் ஆண்டு சின்னச் சின்ன இடையூறுகளையும்இ இன்னல்களையும் தந்தாலும் தன் சுய உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.
பரிகாரம்:
நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் அருளும் துர்க்கை அம்மனை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு இயன்ற அளவு உதவுங்கள்.
கும்பம்
எதிரில் இருப்பவர் பேசத் தொடங்கும் போதே அடுத்ததாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிவதில் கில்லாடி கள் நீங்கள்தான். கவரிமானைப் போல கௌரவம் பார்க்கும் உங்களை பணத்தைக்காட்டி விலைக்கு வாங்க முடியாது. உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடிவரும்.
உங்களுடைய ராசிக்கு 12வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பயணங்களால் அலைச்சல்இ செலவுகள் வந்துபோகும். கடந்தகால கசப்பான அனுபவங்களை நினைவு கூர்ந்து ஆதங்கப்படுவீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும். 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப் பார்க்கயிருப்பதால் முன்கோபம்இ வேலைச்சுமைஇ மனஉளைச்சல்இ சகோதர வகையில் டென்ஷன்இ பணத்தட்டுப்பாடு வந்து செல்லும். வீடுஇ மனை வாங்கும் போது தாய்பத்திரம்இ பட்டாவையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது.
26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும்இ ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல்இ தூக்கமின்மைஇ செரிமானக் கோளாறுஇ மனஇறுக்கம்இ நாக்கில் வறட்சிஇ கைஇ கால் மரத்துப் போகுதல் வந்து போகும். குடும்பத்தில் சண்டைஇ சச்சரவுஇ கணவன் மனைவிக்குள் மோதல்களெல்லாம் வந்துபோகும். மனைவிக்கு தைராய்டுஇ ஃபைப்ராய்டு பிரச்னைகளெல்லாம் வந்துசெல்லும். ஊறுகாய்இ லாகிரி வஸ்துக்கள் மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால்இ 27.7.2017 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம் வீட்டிலும்இ ராகு 6ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள்.
திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீங்கள் சொல்லாததையும்இ சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். அங்குஇ இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோஇ மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்களின் தனஇ லாபாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தன்னம்பிக்கை குறையும்.
திடீர் பயணங்கள்இ செலவுகளால் திணறுவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய அணுகுமுறையை மாற்றுங்கள். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். திடீர் திடீரென்று உணர்ச்சிவசப்படுதல் இவையெல்லாம் இருக்கும். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனால்இ 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 9ம் வீட்டிலேயே அமர்வதால் திடீர் அதிர்ஷ்டஇ யோகம் உண்டாகும். நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
14.12.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள்இ பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள்இ வீண்பழிகள் வந்துசெல்லும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலர் காரியம் ஆகும் வரை உங்களை பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி எறிவார்கள். ஆனால்இ வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 11ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம்இ பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள்.
வியாபாரிகளே! தொட்டதெல்லாம் நஷ்டத்தில் போய் நின்றதே! தொழிலை விரிவுபடுத்தக்கூட பணமில்லாமல் தடுமாறினீர்களே! இனி கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேற்றுமொழி பேசுபவர்இ வெளிநாட்டினர் மூலம் புதுத்தொழில் தொடங்குவீர்கள். போர்டிங்இ லாட்ஜிங்இ ஃபைனான்ஸ்இ கன்சல்டன்சி வகைகளால் லாபமடைவீர்கள். செப்டம்பர்இ டிசம்பர் மாதங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலைக்கு கடையை மாற்றுவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! செப்டம்பர் மாதம் முதல் உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை கூடும். பாரபட்சமாக நடந்துகொண்ட அதிகாரி உங்களை பாராட்டும்படி நிலைமை சீராகும். இடமாற்றம் சாதகமாக அமையும். ஆனாலும்இ 10ல் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். செப்டம்பர் மாதம் முதல் பதவி உயர்வுஇ சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
கன்னிப் பெண்களே! தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணருனீர்களே! வீண் வதந்திகளையும்இ அவமானங்களையும் சந்தித்தீர்களே! இனி பெற்றோரின்
அறிவுரையை ஏற்பீர்கள்.
மாணவ மாணவிகளே! செப்டம்பர் மாதம் முதல் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! ஜெயிக்க வேண்டும் என்னும் வெறியில் ஆர்வமாகப் படிப்பீர்கள். கிரகிக்கும் சக்தி அதிகமாகும். விடைகளை எழுதிப் பாருங்கள். மறதிஇ அலட்சியம் இனி உங்களை விட்டு விலகும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.
கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய பணம் ரிலீசாகும். வரவேண்டிய சம்பளபாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும்.
விவசாயிகளே! வாய்க்கால் வரப்புச் சண்டை தீரும். வற்றிய கிணறு சுரக்கும். பயிர்களை நவீனரக உரமிட்டு பாதுகாப்பீர்கள். எண்ணெய் வித்துகள்இ துவரைஇ உளுந்து பயறு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
அரசியல்வாதிகளே! போட்டி அரசியல் நடத்திக் கொண்டுஇ இருந்த சேமிப்பையும் கரைத்தீர்களே! இனி தாய்கழகத்தில் இணைவீர்கள். தேர்தல் களத்தில் ஜெயிப்பீர்கள். இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாற வைத்தாலும் மையப்பகுதியிலிருந்து அதிரடி மாற்றங்களையும்இ வெற்றிகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சிதம்பரம் நடராஜப் பெருமானையும்இ கோவிந்தராஜப் பெருமாளையும் தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லத்திற்கு சென்று இயன்ற உதவி செய்யுங்கள்.
மீனம்
தங்கத்தின் தரம் கூடக் குறையலாம் ஆனால்இ உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள்தான். உங்களுக்கு லாப ராசியில் சந்திரன் நிற்கும்போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். டி.வி.இ ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு 10ம் வீட்டில் சூரியன் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறன்இ ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புது பதவிகளும்இ சிறப்பு பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். மறைமுக எதிரிகளை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசுக் காரியங்கள் உடனே முடியும்.
26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால் உங்களுடைய பலம்இ பலவீனத்தை உணருவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். ஆனால்இ ராகு 6ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். கடந்தகால சுகமான அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.
ஷேர் மூலம் பணம் வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். ஹிந்திஇ மலையாளம் பேசுபவர்களால் மாற்றம் உண்டாகும். தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சி
களெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். ஆனால்இ ராகு 5ம் வீட்டில் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கை நினைத்து வருந்துவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.2017 வரை உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகும் அறிவும் கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஒத்து வராதஇ உதவாதஇ உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் செல்வாக்கு கூடும். ஆனால்இ 2.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 8ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும்.
வீண் அலைக்கழிப்புகளும் அதிகமாகும். திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். பணம்இ நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 14.12.2017 முதல் சனிபகவான் 9ம் வீட்டில் நிற்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.
குடும்பத்தில் நல்லது நடக்கும். உங்களை குற்றம்இ குறை கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும்.
அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். தந்தை வழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும். வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 10ல் அமர்வதால் வீரியத்தை விட காரியம்தான் பெரிது என்பதை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆனால்இ உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
வியாபாரிகளே! சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது உங்களை ஏமாற்ற முயற்சி செய்வார்கள். வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள்.
இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்தீர்களே! கடையை வேறு இடத்திற்கு இனி மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களும் வர வாய்ப்பிருக்கிறது. இரும்புஇ உணவுஇ ஏற்றுமதி இறக்குமதிஇ கடல்வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களை ஆழம் பார்ப்பார்கள்.
உத்யோகஸ்தர்களே! செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். ஆனால்இ மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம்இ அயல்நாடு செல்ல வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடின உழைப்பாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பாலும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்காதீர்கள். பள்ளிஇ கல்லூரி கால தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். சிலர் அயல்நாடு செல்வீர்கள்.
மாணவமாணவிகளே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை பேச்சை தவிர்க்கப்பாருங்கள் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்காமல் முதல் வரிசையில் வந்தமருங்கள்.
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களை விட அறிமுக கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.
அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை கொடுக்கும். கோஷ்டி பூசல் அதிகரிக்கும். மேடையில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு எதிர்கட்சியினரை ஆதாரமில்லாமல் வசை பாடாதீர்கள்.
விவசாயிகளே! நிலத்தகராறால் கோர்ட்இ கேஸ் போனீர்களேஇ வெற்றி உங்களுக்குத்தான். மகசூல் பெருகும். கூட்டுறவு வங்கி கடனுதவி கிடைக்கும். பூச்சித் தொல்லை அதிகரிக்கும். இந்த 2017ம் ஆண்டு அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதுடன்இ சின்னச் சின்ன எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னைஇ பூவிருந்தவல்லி அருகேயுள்ள குன்றத்தூர் தலத்தில் அருளும் முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.
- See more at: http://www.asrilanka.com/2016/12/23/37745#sthash.zkpl4LJP.dpuf

No comments:

Post a Comment