தொலைக்காட்சி!!

Monday, November 14, 2016

கண்ணாடி போத்தலில் பிள்ளையாரின் உருவம்!

மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மேற்படி கிராமத்தை சேர்ந்த மா.நடராசா க.யோகராணி தம்பதியினரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல் ஒன்று பிள்ளையார் வடிவில் உருவெடுத்துள்ளது.
இது சம்பந்தமாக மேற்படி வீட்டின் க.யோகராணி தெரிவிக்கையில்,
“நான் இருபத்தேழு வருடங்களாக கேதார கெளரி விரதம் அனுஷ்டித்து வருவது வழமை. ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து கெளரி காப்பு கையில் கட்டுவேன். அவ்வாறு புதிய கெளரி காப்பு கையில் கட்டும்போது வருடாந்தம் உள்ள கெளரி காப்பினை ஒரு கண்ணாடி போத்தலில் கழட்டி வைத்து வந்தேன். இவ்வாறே ஒவ்வொரு வருடமும் செய்துவந்தேன்.
இவ் வருடமும் (2016) கெளரி விரதம் அனுஷ்டித்து உபவாச நாள் புதிய காப்பு கையில் கட்டி விட்டு வீட்டுக்கு வந்து சுவாமி அறையில் பூசை பொருட்களை வைத்து திரும்பும் போது ஆச்சரியப்படும் அளவிற்கு பெரிய வெளிச்சம் திடீரென தோன்றி மறைந்தது.
உடனே அந்த கெளரி காப்புக்கள் இருந்த போத்தலில் ஒரு வெளிச்சம் தென்பட்டது. அதன் பின் போத்தலைப் பார்க்கும்போது நான் வணங்கும் பிள்ளையார் வடிவமாக மாறியது.
இந்த விடயத்தை நான் உடனே யாரிடமும் வெளிப்படுத்தவில்லை சில நாட்கள் சென்ற பின் பூசகர் ஒருவரிடம் தெரிவித்தேன். அவர் அதனை தொடர்ந்து வணங்கி வாருங்கள் என்று கூறினார்.
பின்பு அதனை அக்கம் பக்கத்தாரிடம் தெரியப்படுத்தினேன், அதன் பிறகு அனேகமானவர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்” என்று கூறினார்.
மேலும், “குறித்த அதிசயம் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொண்டதும், எனது விலாசம் கேட்டு வந்து பார்வையிட்டு செல்கின்றார்கள். அதிகமானவர்கள் வருவதினால் எனக்கு வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் உள்ளது. அனைவருக்கும் காட்டவேண்டிய நிலையில் உள்ளேன்.
இந்த ஆச்சரியத்தையும் தாண்டி எனது மகள் 8 வயது வரையும் வாய் பேச முடியாமல் இருந்தார். அந்த வேளையில் மட்டக்களப்பு களுதாவளைப் பிள்ளையார் கோயில் நேர்த்தி கட்டியதும் பிள்ளையாரிடம் நான் மன்றாட்டமாக எனது மகன் 3 நாட்களில் கதைக்க வேண்டும் என நேர்த்தி செய்து வந்தேன்,
அப்போது எனது மகன் சரியாக 3 நாளில் அம்மா என கதைத்தார், அதில் இருந்து நாம் பிள்ளையார் வழிபாட்டையும் பிள்ளையாரையும் வணங்கி வந்தோம்.
இந்த குறித்த 2 விடயங்களும் எங்கள் வீட்டில் இடம்பெற்றதினால் மிகவும் ஆச்சரியமாகவுள்ளதுடன் இறைவனின் அருட்கடாச்சம் கிடைத்துள்ளது.
நாங்கள் கடந்த யுத்த காலத்தில் இருப்பிடத்தை விட்டு கட்டிய புடவையுடன் கிண்ணயடி கிராமத்தை விட்டு வெளியேறியிருந்தோம், இந்த நிலையில் ஒருவேளை உணவு இறைவனின் அருளால் கிடைக்கின்றது. பல கஸ்டத்தின் மத்தியில் இறைவனை வழிபட்டோம், கஸ்டத்தின் மத்தியில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றேன் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment