தொலைக்காட்சி!!

Thursday, October 6, 2016

யாழ் திரையரங்குகளின் இன்றைய நிலை!


இன்று ராஜா, சாந்தி (செல்வா) இரண்டு திரையரங்குகளில் தான் திரைப்படங்கள் யாழில் காண்பிக்கின்றது என்ற செய்தியை வெளிநாடுகளில் உள்ள ரசிக்கப் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம் .
1980ற்கு பின் விடுதலை போராட்டம், தொலைக்காடசி வருகை, கசெட், சீ.டி அறிமுகம். மாணவர்களிற்கான பிரத்தியோக கல்வி நிலையங்கள். படம் பார்ப்பவர்கள், வெளிநாடு பயணம் என பல காரணங்களை திரையரங்குகள் குறிந்த விளம்பரமாக கூறலாம்.
1937ல் வெளிவந்த ‘’ஏழிசை வேந்தர்’’ காலஞ்சென்ற அன்றய சூப்பர் ஸ்டார் தியாகராஜா பாகவதருடைய படங்கள் கூட யாழ் திரையரங்குகளில் திரையிடப்பட்டதாக வரலாறுகள் உண்டு. திரையரங்குகளில் கட்-அவுட் கட்டுகின்ற கலாச்சாரத்திற்கு யாழ்ப்பாணம் என்றும் விதிவிலக்கல்ல.
உலகம் சுற்றும் வாலிபன் (ஸ்ரீதரில் ஓடியது)
வசந்த மளிகை (வெலிங்டனில் ஓடியது )
இதயக்கனி (மனோகராவில் ஓடியது )
குடியிருந்த கோவில் (ராஜாவில் ஓடியது )
அடிமைப்பெண் (இராணியில் ஓடியது )
நவரத்தினம் (சாந்தியில் ஓடியது )
ஒரு கைதியின் டயரி (றீகலில் ஓடியது )
பட்டாக்கத்தி பைரவன் (ஸ்ரீதரில் ஓடியது)
கந்தன் கருணை (இராணியில் ஓடியது)
வாடகைக் காற்று (இராணியில் ஓடியது)
மாட்டுக்காரவேலன் (ராணி தியேட்டர் )
நாளை நமதே (ராணி தியேட்டர் )
காவல்காரன் (ராஜா தியேட்டர் )
நீரும் நெருப்பு (ராஜா தியேட்டர் )
பாபு (ராஜா தியேட்டர் )
ரிக்ஷாகாரன் (வெலிங்டன் )
சகலகலாவல்லவன் (ஷாந்தி )
மூன்றாம் பிறை (ஸ்ரீதர்)
இன்னும் இந்த கட் அவுட்டுகள் பலரது நெஞ்சங்களில் நிலைத்து இருக்கும்.
இவை மட்டுமல்ல, சுபாஷ், ரிக்கோ , லிங்கம் கூல் பார்களிற்கு தமது காதலியை கூட்டிச்சென்று விட்டு இந்த திரையரங்குகள் பலரது காதலை கல்யாணம் வரை கொண்டு வர காரணமாக இருந்ததை யாரும் மறக்க மாட்டார்கள் . மறந்தும் இருக்க மாட்டார்கள் . இங்கு சென்று காதல் கை கூடாதவர்கள் இருந்தாலும் அவர்களுடைய கொம்பியூடர் பாஸ்வேர்ட் ஆக காதலியின் பெயர் இன்று வரை இருப்பதற்கு இந்த திரையரங்குகள் காரணமாக இருந்து இருக்கிறது.
12 தியேட்டர்கள் யாழ்நகரில் இருந்ததாலும் இன்று இரண்டு தியேட்டர்களே இயங்கி வருகின்றன.
வெலிங்டன் தியேட்டர் முற்றாக அழிந்து கட்டிடங்கள் மட்டும் தெரிகிறது. கொழும்பு-யாழ்ப்பாணம் ஓடிய K.G.Express பஸ்கள் நின்ற இடம் புல் தரைகளாக இருக்கிறது.
ஸ்ரீதர் தியேட்டர் இருந்த இடத்தில் ஈ.பீ.டி.பீ.யின் கட்சி காரியாலயம் இயங்கி வருகிறது.
வின்சன் திரையரங்கு கட்டிடத்தில் பொருட்கள் வைத்து எடுக்கும் களஞ்சியமாக பயன் படுத்தப்படுகிது.
இந்த வின்சன் தியேட்டர் கீழிருந்து மேலாக மேல் நாட்டு திரையரங்குகள் போல் கட்டபட்டிருந்தது.
இங்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் ”என் கடமை ” படம் ஓடியது ஞாபகத்தில் இருக்கிறது. ராணி தியேட்டர் இருந்த இடத்தில் சீமாட்டி எனும் புடவை கடை இருக்கிறது .
ரியோ திரையரங்கு நகரசபை கட்டிடத்தோடு அழிந்து விட்டது. லிடோ திரையரங்கு இருந்த இடத்தில் கடைகள் கட்டபட்டுள்ளது. ஆங்கில படங்கள் ஓடி தமிழர்களை ஆங்கிலம் பேச வைத்த ரீகல் தியேட்டரின் கட்டிட சுவர்களை காண கூடியதாக இருக்கிறது.
கற்பக விநாகயர் ஆலயத்திற்கு அண்மையில் இருக்கும் மனோகராவில் தற்போது படங்கள் ஓடுவதில்லை.
இவ்வாறு 1960 முதல் 1980 காலப்பகுதிகளில் இளையவர் , முதியவர்கள் , குடும்பத்தினர் , காதலர்கள் எனப்பலருடைய வாழ்க்கையின் பொழுது போக்குக்கு களம் அமைத்த திரையரங்குகள் இவ்வாறு போய் விட்டன .
ஆனால் இங்கு பார்த்த படங்களும் , யாரோடு படம் பார்க்க சென்றோமோ அந்த நினைவுகள் எல்லாம் பசுமையானவையாகவே இருக்கின்றன.
இன்று கார்கில்ஸ் சதுக்கத்தில் புதிதாக சொகுசு திரையரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை விட யாழ் மாவட்டத்தில்…
இணுவில் காலிங்கன்சங்கிலியன் தியேட்டர் ,
மானிப்பாய் வெஸ்லி  திரையரங்கம்,
சங்கானையில் மணிமஹால் தியேட்டர் ,
பண்டத்தரிப்பில் செல்வா தியேட்டர் ,
சுன்னாகத்தில் நாகம்ஸ் தியேட்டர் ,
மூளாயில் நியூ தீவாளி தியேட்டர் ,
நெல்லியடியில் மகாத்மா தியேட்டர் , லட்சுமி தியேட்டர் ,
வல்வெட்டித்துறையில் யோகநாயகி தியேட்டர் ,
சாவகச்சேரியில் தேவேந்திர தியேட்டர் , வேல் சினிமா தியேட்டர் ,
வல்வெட்டியில் ரஞ்சனாஸ் தியேட்டர் ,
கோண்டாவிலில் லதா தியேட்டர் ,
அச்சுவேலியில் லாலா சோப் ஒரு தியேட்டர் இருந்ததாகவும் கிளிநொச்சியில் ஒரு தியேட்டர்
இருந்ததாகவும் வரலாற்று பக்கங்களில் பதிவுகள் இருக்கின்றன.
இதில் தியேட்டர் உரிமையாளர்களின் ஒற்றுமை காரணமாக ‘’உலகம் சுற்றும் வாலிபன்’’ போன்ற வரலாற்று படங்கள் ஒரே நேரத்தில் மூன்று திரையரங்குகளில் ஓடி வரலாறு படைத்தது.
இப்போ உங்க நினைவுகளில்இறைமீட்கப்படுவதுதெரியும்
ஆனால்அதைஇரைமீட்டுஅசைபோடுங்கள்!

No comments:

Post a Comment