தொலைக்காட்சி!!

Wednesday, August 24, 2016

பிரித்தானியாவில் கடலில் மூழ்கி தமிழர் மரணம்

தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை.
பரிதாபமாக இறந்துபோன கதீஸ்வரன் என்னும் தமிழர் ஆத்மசாந்திக்கு பிரார்த்தனை செய்வோம்.
அவரது நண்பர் ஒருவர் என்ன நடந்தது என்று முக நூலில் எழுதி உள்ளார்.
எனது நண்பனின் கூக்குரல் கடந்த சனிக்கிழமை 20/08/2016 நாமும் நண்பர்கள் உறவினர்கள் சகிதம் Poole எனப்படும் பிரித்தானியாவின் கடற்கரைக்கு சென்றிருந்தோம். காலை 8.30 மணிக்கு எமது பயணம் சந்தோசமாகவே ஆரம்பித்தது கடற்கரையிலே BBQ உடன் நானும் நண்பர்களும் ஈடுபட்டவேளை நிஷா கூக்குரலிட்டார் தாழுறார் காப்பாற்றுங்கோ என்று எல்லோரும் கடலைநோக்கி ஓடினார்கள். நானும் ஓடினேன் எனக்கு நீச்சல் தெரியாது நீச்சல் தெரிந்திருந்தால் கூட அந்த அலைக்கு என்னால் தாக்குப்பிடித்திருக்க முடியாது. எனவே நான் life guard இருக்குமிடத்தை நோக்கி ஓடினேன் அதற்கு முன்னரே மேனனும் சுரேசும் life guard க்கு தகவல் தெரிவித்திருந்து அவர்கள் ஓடி வந்துகொண்டிருந்தார்கள் அவர்கள் கரையிலே கொண்டுவந்தபோதுதான் தெரிந்தது அது எம்முடன் வந்திருந்த கதீஸ்வரன் ambulance வரும்வரை ife guards CPR, First Aid கொடுத்துக் கொண்டிருக்க நாம் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தோம்.
Air Ambulance ஐயும் வரவழைத்திருந்தார்கள் இருந்தும் எதுவுமே பயன்ற்றதாகிப்போனது ஆம் ஐந்து வயதுடைய மகள், 41 நாட்களேயான மகன் அவருடைய அன்பு மனைவி மற்றும் அனைவரையும் விட்டுவிட்டு கதீஸ்வரனின் உயிர் பிரிந்திருந்தது.

No comments:

Post a Comment