தொலைக்காட்சி!!

Monday, June 20, 2016

சுவிஸில் குடியிருப்பு அனுமதி பெறும் அகதிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருப்பு அனுமதி பெற அகதிகள் போலி ஆவணங்கள் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் குடியிருப்பு அனுமதி சேவைகள் அலுவலக தலைமை அதிகாரியான அலெக்ஸாண்டர் ஓட் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, குடியிருப்பு அனுமதி(Residence Permit) பெறுவது தொடர்பாக அளிக்கப்படும் ஆவணங்களை அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது.
அலுவலகங்களில் அளிக்கப்பட்ட 850 விண்ணப்பங்களை ஆய்வு செய்தபோது, அவற்றில் 10 சதவிகித ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொசோவா, அல்பேனியா, செர்பியா, துருக்கி, ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு குடியிருப்பு அனுமதி பெற விசா தேவை என்பதால், இவர்கள் அதிகளவில் போலி ஆவணங்களை அளிக்கின்றனர்.
குடியிருப்பு அனுமதி பெறும்போது போலியான கடவுச்சீட்டு அளிப்பது மட்டுமில்லாமல், குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான வாடகை மற்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது போலியான ஆவணங்களை அளித்துள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது மத்திய, மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என அலெக்ஸாண்டர் ஓட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment