தொலைக்காட்சி!!

Thursday, January 21, 2016

பிரித்தானிய தபால் நிலையத்தில் கொள்ளையடித்த இலங்கைத் தமிழர்களுக்கு சிறைத்தண்டனை!

பிரித்தானியாவின் டெர்பி பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் இருந்து 13,000 பவுண்ட் திருட்டு போயுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து நடைபெற்ற விசாரணையில் அந்த தபால் நிலையத்தின் அருகாமையில் கடை வைத்திருக்கும் இலங்கை தமிழர்கள் இருவர் மீது விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து 36 வயதான ராசதுரை ரகுவண்ணன் என்பவரையும் அவரது கடையில் பணியாளராக இருக்கும் 35 வயதான சத்தியநாதன் கனகசபை ஆகிய இருவரையும் பொலிசார் விசாரித்துள்ளனர்.
இதில் அவர்கள் இருவரும் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.
3 மர்ம நபர்கள் தங்கள் கடை மற்றும் தபால் நிலையத்தில் ஆயுதங்களுடன் புகுந்து பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இவர்களது கடையின் அருகாமையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் இதுகுறித்த எந்த பதிவுகளும் இல்லை என விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து தபால் நிலையத்தில் இருந்து 13,000 பவுண்ட் அளவுக்கு கொள்ளையிட்டது Northampton பகுதியை சேர்ந்த ரகுவண்ணன் தான் என விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் ரகுவண்ணன் என்பவருக்கு 20 மாத சிறை தண்டனையும், கனகசபை என்பவருக்கு 10 மாத சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மேலும் 2 ஆண்டுகள் தடை விதித்தும் 100 மணி நேரம் ஊதியமில்லாமல் பணியாற்ற வேண்டும் எனவும் கனகசபை என்பவரை அறிவுறுத்தியுள்ளனர்.
ரகுவண்ணன் களவாடியதாக கூறும் பணத்தை திருப்பித் தர சிலர் முன்வந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmuyBRVSWiw2E.html

No comments:

Post a Comment