தொலைக்காட்சி!!

Friday, January 1, 2016

2016 - புத்தாண்டு பலன்கள்!

2016 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பலன்கள்.
மேஷம்
மனதிற்கு சரியென்று பட்டதை ஒளிவு மறைவின்றி பேசிவிடுவீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் கடமையை செய்யும் உங்களை சோதனைகள் மேலும் பக்குவப்படுத்தும். வேகத்தை குறைத்து நிதானமாக செயல்படுவது அவசியம்.
தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க பேச்சில் கூடுதல் கவனம் அவசியம். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் வலுக்கும். வசதி, வாய்ப்புகள் இருந்தும் நேரத்திற்கு உணவு உட்கொள்ள இயலாது போகும். பார்வை கோளாறுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் அவசியம். பிரயாணம், வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை.
குறிப்பாக பொருட்கள் மீது கவனம் அவசியம். ஞாபக மறதியால் இழப்புகளுக்கு ஆளாகலாம். கொடுக்கல், வாங்கலை முற்றிலும் தவிர்க்கவும். உங்களுக்கு நம்பிக்கையான நபர் ஒருவர் உங்கள் எதிரியோடு உறவாடும் வாய்ப்பு உண்டு.
அந்நியப் பெண்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. நண்பர்களோடு விவாதத்தை தவிர்ப்பது அவசியம். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சி பலனளிக்கும். தகப்பனார் வழி உறவினர்கள் உங்களால் லாபம் காண்பார்கள்.
குடும்பத்தாரிடம் அனுசரணை அவசியம். பாகப்பிரிவினை விவகாரங்களில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.
தம்பதியருக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆன்மிகம் மற்றும் சமூகச் சேவை பணிகள் கூடுதல் நிம்மதி தரும். வம்புச் சண்டை விவகாரங்கள் தேடிவரும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை அவசியம்.
தொடர்பணிச்சுமையால் ஓய்வெடுக்கும் நேரம் குறையும். புனிதப் பயணம், க்ஷேத்ராடனம், தீர்த்த யாத்திரை, பல்வேறு ஆலய தரிசனத்திற்கான வாய்ப்பு உண்டு.
மாணவர்கள்: கல்வி நிலையில் சாதகமான சூழல் நிலவும். கடுமையாக உழைத்தால் மிகுதியான மதிப்பெண்கள் கிடைக்கும். அறிவியல், இன்ஜினியரிங், ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சிறந்த நற்பலன்களை காண்பார்கள்.
பெண்கள்: வாழ்க்கைத்துணையின் உடல், மனநிலையில் முன்னேற்றம் காண உங்கள் உதவி தேவை. குழப்பத்தை தவிர்க்க சம்பந்தமில்லாத பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். பொது விவகாரங்களில் ஈடுபடும் போது கூடுதல் எச்சரிக்கை அவசியம்.
ஆரோக்கியம்: தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரணக் கோளாறு பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். கணுக்கால், முழங்கால் வலிகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் அபவிருத்தியும் மாற்றங்களும் ஏற்படும். சுய மற்றும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள், கலைஞர்களுக்கு தடைகளை தாண்டி சாதகமான சூழல் நிலவும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் ஏற்றம் காணும்.
பரிகாரம்: பிரதி செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடலாம். சோளிங்கர் திருத்தல யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.
ரிஷபம்
மனதிற்கு சரியென்று பட்டதை ஒளிவு மறைவின்றி பேசிவிடுவீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் கடமையை செய்யும் உங்களை சோதனைகள் மேலும் பக்குவப்படுத்தும். வேகத்தை குறைத்து நிதானமாக செயல்படுவது அவசியம். தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க பேச்சில் கூடுதல் கவனம் அவசியம்.
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் வலுக்கும். வசதி, வாய்ப்புகள் இருந்தும் நேரத்திற்கு உணவு உட்கொள்ள இயலாது போகும். பார்வை கோளாறுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் அவசியம்.
பிரயாணம், வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக பொருட்கள் மீது கவனம் அவசியம். ஞாபக மறதியால் இழப்புகளுக்கு ஆளாகலாம்.
கொடுக்கல், வாங்கலை முற்றிலும் தவிர்க்கவும். உங்களுக்கு நம்பிக்கையான நபர் ஒருவர் உங்கள் எதிரியோடு உறவாடும் வாய்ப்பு உண்டு.
அந்நியப் பெண்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. நண்பர்களோடு விவாதத்தை தவிர்ப்பது அவசியம். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சி பலனளிக்கும். தகப்பனார் வழி உறவினர்கள் உங்களால் லாபம் காண்பார்கள். குடும்பத்தாரிடம் அனுசரணை அவசியம். பாகப்பிரிவினை விவகாரங்களில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.
தம்பதியருக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆன்மிகம் மற்றும் சமூகச் சேவை பணிகள் கூடுதல் நிம்மதி தரும். வம்புச் சண்டை விவகாரங்கள் தேடிவரும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை அவசியம். தொடர்பணிச்சுமையால் ஓய்வெடுக்கும் நேரம் குறையும். புனிதப் பயணம், க்ஷேத்ராடனம், தீர்த்த யாத்திரை, பல்வேறு ஆலய தரிசனத்திற்கான வாய்ப்பு உண்டு.
மாணவர்கள்: கல்வி நிலையில் சாதகமான சூழல் நிலவும். கடுமையாக உழைத்தால் மிகுதியான மதிப்பெண்கள் கிடைக்கும். அறிவியல், இன்ஜினியரிங், ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சிறந்த நற்பலன்களை காண்பார்கள்.
பெண்கள்: வாழ்க்கைத்துணையின் உடல், மனநிலையில் முன்னேற்றம் காண உங்கள் உதவி தேவை. குழப்பத்தை தவிர்க்க சம்பந்தமில்லாத பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். பொது விவகாரங்களில் ஈடுபடும் போது கூடுதல் எச்சரிக்கை அவசியம்.
ஆரோக்கியம்: தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரணக் கோளாறு பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். கணுக்கால், முழங்கால் வலிகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் அபவிருத்தியும் மாற்றங்களும் ஏற்படும். சுய மற்றும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள், கலைஞர்களுக்கு தடைகளை தாண்டி சாதகமான சூழல் நிலவும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் ஏற்றம் காணும்.
பரிகாரம்: பிரதி செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடலாம். சோளிங்கர் திருத்தல யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.
மிதுனம்
மனதிற்கு சரியென்று பட்டதை ஒளிவு மறைவின்றி பேசிவிடுவீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் கடமையை செய்யும் உங்களை சோதனைகள் மேலும் பக்குவப்படுத்தும். வேகத்தை குறைத்து நிதானமாக செயல்படுவது அவசியம்.
தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க பேச்சில் கூடுதல் கவனம் அவசியம். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் வலுக்கும். வசதி, வாய்ப்புகள் இருந்தும் நேரத்திற்கு உணவு உட்கொள்ள இயலாது போகும். பார்வை கோளாறுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் அவசியம்.
பிரயாணம், வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக பொருட்கள் மீது கவனம் அவசியம். ஞாபக மறதியால் இழப்புகளுக்கு ஆளாகலாம். கொடுக்கல், வாங்கலை முற்றிலும் தவிர்க்கவும். உங்களுக்கு நம்பிக்கையான நபர் ஒருவர் உங்கள் எதிரியோடு உறவாடும் வாய்ப்பு உண்டு.
அந்நியப் பெண்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. நண்பர்களோடு விவாதத்தை தவிர்ப்பது அவசியம். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சி பலனளிக்கும். தகப்பனார் வழி உறவினர்கள் உங்களால் லாபம் காண்பார்கள். குடும்பத்தாரிடம் அனுசரணை அவசியம். பாகப்பிரிவினை விவகாரங்களில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.
தம்பதியருக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆன்மிகம் மற்றும் சமூகச் சேவை பணிகள் கூடுதல் நிம்மதி தரும். வம்புச் சண்டை விவகாரங்கள் தேடிவரும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை அவசியம். தொடர்பணிச்சுமையால் ஓய்வெடுக்கும் நேரம் குறையும். புனிதப் பயணம், க்ஷேத்ராடனம், தீர்த்த யாத்திரை, பல்வேறு ஆலய தரிசனத்திற்கான வாய்ப்பு உண்டு.
மாணவர்கள்: கல்வி நிலையில் சாதகமான சூழல் நிலவும். கடுமையாக உழைத்தால் மிகுதியான மதிப்பெண்கள் கிடைக்கும். அறிவியல், இன்ஜினியரிங், ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சிறந்த நற்பலன்களை காண்பார்கள்.
பெண்கள்: வாழ்க்கைத்துணையின் உடல், மனநிலையில் முன்னேற்றம் காண உங்கள் உதவி தேவை. குழப்பத்தை தவிர்க்க சம்பந்தமில்லாத பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். பொது விவகாரங்களில் ஈடுபடும் போது கூடுதல் எச்சரிக்கை அவசியம்.
ஆரோக்கியம்: தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரணக் கோளாறு பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். கணுக்கால், முழங்கால் வலிகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் அபவிருத்தியும் மாற்றங்களும் ஏற்படும். சுய மற்றும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள், கலைஞர்களுக்கு தடைகளை தாண்டி சாதகமான சூழல் நிலவும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் ஏற்றம் காணும்.
பரிகாரம்: பிரதி செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடலாம். சோளிங்கர் திருத்தல யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.
கடகம்
புத்தாண்டை எச்சரிக்கையோடு துவக்கும் நீங்கள் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள், நலம் விரும்பிகள், குடும்பத்தினர், விரும்பும் நபர்களை பிரிந்து இடம் விட்டு இடம் பெயர வேண்டியிருக்கும். நல்லது. நினைத்து செய்யும் செயல் அடுத்தவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படும். பொருள் இழப்பு, மற்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை, மன உளைச்சல் இருக்கும். விரும்பும் உணவுகளை உண்ண இயலாமல் போகும். வாகன பயணத்தில் கூடுதல் கவனம் தேவை.
உற்றார் உறவினர்களுடன் பகை, தொழிலில் தேக்கம், போன்ற சங்கடங்கள் வரும். குடும்ப பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நன்மை தரும். வளர்ப்பு பிராணிகளிடம் எச்சரிக்கை அவசியம். பெற்றோர் மற்றும் குடும்ப பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் அவசியம். தாயார் வழி உறவினர்கள் உங்கள் உதவி நாடி வரக்கூடும்.
உதவி செய்ய இயலாத நிலையில் உங்களோடு விரோதம் உருவாகும். உங்களது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் வரும் வகையில் நெருக்கமான நபர் ஒருவர் செயல்படுவார். மன வருத்தம் கூடும். சிரமங்கள் இருந்தாலும், நன்மைகளையும் அடைய உள்ளீர்கள்.
சொத்துகளில் ஸ்திரத்தன்மை உண்டாகும். வீடு, வண்டி, வாகனம், மனை வாங்க நேரம் சாதகமாக இருக்கும். திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார சிக்கல் இருக்காது. சிக்கனமாக இருப்பீர்கள். திட்டமிட்டு சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத்துணை தொழிலில் துணைநிற்பார். இருவரும் இணைந்து செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க நேரும்.
மாணவர்கள்: கல்வியில் முன்னேற கூடுதல் உழைப்பு தேவை. டெக்னிக்கல், கலைத்துறை படிப்புகள், ஓவியம், நாட்டியம், இசை, சங்கீத மாணவர்கள் கடின உழைப்பால் முன்னேற்றம் காண்பர்.
பெண்கள்: குடும்ப மேன்மைக்காக குல தெய்வ வழிபாடு செய்யலாம். நிதானம், பொறுமை அவசியம். குழந்தைகளிடம் கூடுதல் எச்சரிக்கையும், கண்காணிப்பும் தேவை. தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும்.
ஆரோக்கியம்: உடல்நிலையில் கூடுதல் கவனம் மருத்துவ செலவுகளை குறைக்கும். டென்ஷனை தவிர்த்தால் உடல் ஆேராக்கியம் கூடும்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில் மற்றும் கலைத்துறையினருக்கு முன்னேற்றம் இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை. கமிஷன், தரகு, ஸ்டேஷனரி, உணவுப் பண்டங்கள் வியாபாரம், திரவப் பொருட்கள், வாசனாதி திரவியங்கள், பால் சார்ந்த வியாபாரம், போன்றவற்றில் சிறப்பான லாபம் காண்பீர்கள்.
பரிகாரம்: வருடப்பிறப்பன்று சிவாலய தரிசனம் நன்று. ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி நாளன்றும் விநாயகப் பெருமானை வழிபட சங்கடங்கள் விலகும். முக்கியமான பணிகளுக்குச் செல்லும் முன் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு செயலில் இறங்குங்கள்.
சிம்மம்
மன உறுதி, அசாத்திய தைரியம் கூடும். சிரமங்கள் குறையும். காரியத்தடைகள் அகலும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனைகள் படைப்பீர்கள். வீடு, வண்டி, வாகனம், மனை, கால்நடை போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்குவீர்கள்.
உங்கள் தேவைகள் யாவும் எளிதில் பூர்த்தியாகும். மன விருப்பங்கள் நிறைவேறும். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவடையும். நினைத்ததை நடத்தி முடிக்கும் செயல்திறன் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். நிலுவைத் தொகைகள் வசூலாகும்.
பொருளாதார கஷ்டங்கள் சீரடையும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பெயர், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, மதிப்பு, மரியாதை தேடி வரும்.
உங்கள் வார்த்தைகள் அடுத்தவர்களிடம் மதிப்பும், செல்வாக்கும் பெறும். உங்கள் செயல்வேகத்தை கண்டு எதிரிகள் பிரமிப்பர். உடன்பிறந்தோரால் ஆதாயம், வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை இருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் மூன்றாவது கரமாக செயல்படும். உறவினர்களால் பொருளிழப்பு உண்டாகும். பெற்றோரால் ஏற்படும் மருத்துவ செலவுகளை குறைக்க அவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையால் நற்பலன்களை காண உள்ளீர்கள்.
பின்னால் இருந்து இயக்கி உங்களுக்கு உயர்ந்த அங்கீகாரம் கிடைப்பதில் அவரது உழைப்பு முக்கியப் பங்காற்றும். ஆடம்பர செலவுகள் குறைந்து வாழ்க்கைத்துணையின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும். மொத்தத்தில் 2016ம் ஆண்டு உங்களை வளமுடன் வாழவைக்கும்.
மாணவர்கள்: கல்வியில் முன்னேற அயராது உழைப்பது அவசியம். ஞாபக மறதியால் அவதியை தவிர்க்க கூடுதல் எழுத்து பயிற்சி நல்லது. உயர் கல்வி, ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
பெண்கள்: நீங்கள் முன்னின்று செய்யும் காரியங்கள் சிறப்பான வெற்றி தரும். சமூக சேவையில் நாட்டம் கூடும். தன்னலமற்ற செயல்பாடுகளால் கவுரவம் கூடும். தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்: தேவையற்ற குழப்பம், டென்ஷனை தவிர்த்தால் உடல் ஆரோக்கியம் கூடும். ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை அவசியம்.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு நிர்வாக திறன் கூடும். பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு திறமையான, விசுவாசமான பணியாட்கள் வேலைக்குக் கிடைப்பார்கள். குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர் லாபம் காண்பார்கள். ஆட்டோ மொபைல்ஸ் தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும்.
பரிகாரம்: பிரதி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சிவாலய வழிபாடு நன்மை தரும். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருபுவனத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசரபேஸ்வர ஸ்வாமியை தரிசிக்க தடைகள் விலகும்.
கன்னி
சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். மன நிலை, உடல்நிலை முன்னேற்றம் காணும். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பொருளாதார நிலை சீராக இருக்கும். வரவு வந்தாலும் அதை உபயோகிக்க இயலாத சூழல் இருக்கும். இந்த நிலையால் அன்றாட செலவுகளுக்கு சற்று சிரமப்படுவீர்கள். உடல் நிலையில் பாதிப்பு இருக்காது.
சோதனைகளை எளிதில் கடந்துவிட முடியும். குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழலும், தூரதேச சஞ்சாரமும், பொருளாதார ரீதியாக சிரமப்பட வேண்டிய நிலையும், திருட்டு பயமும் உண்டாகும்.
இருந்தாலும் ஜனன ஜாதகத்தில் பலம் பெற்றவர்களுக்கும், தற்காலத்தில் வலுவான தசாபுக்தி நடைபெறுபவர்களுக்கும் மேற்சொன்ன பலன்களின் பலம் குறைவாகவே இருக்கும். யாருக்கும் எளிதாக எவ்விதமான வாக்குறுதியும் அளிப்பது கூடாது. பேச்சில் கோபம் வெளிப்படும்.
தீயசொற்களை தவிர்த்து நற்சொற்களை பேசுவது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் உடனடி முடிவுகளை தவிர்க்கவும். குழப்பமான விவகாரங்களில் நலம்விரும்பிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம். எந்தச் செயலிலும் கால தாமதம் இருக்கும். ஆனால் காரிய வெற்றி நிச்சயம். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.
அவர்களோடு இணைந்து குடும்ப சலசலப்புகளை களையலாம். சொத்து பிரச்னைகள் விலகும். தாயார் வழி உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். ஆன்மிகப் பணிகளுக்கு அதிகம் செலவழிப்பீர்கள். கடன் தொல்லை குறையும். ஜாமீன், கியாரண்டியை கண்டிப்பாக தவிர்க்கவும். பிரசினைக்குரிய நேரத்தில் நண்பர்களின் துணை நன்மை தரும். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. மற்றபடி நன்மைகளை அனுபவிக்க உள்ளீர்கள் என்பதில் மாற்றம் இல்லை.
மாணவர்கள்: கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. கூட்டுப்பயிற்சி சிறப்பான வெற்றி தரும். நண்பர்களின் ஆலோசனைகள் நன்மை தரும். ஆராய்ச்சி மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பொதுவாக மாணவர்களுக்கு உழைப்பின் அடிப்படையில் பொன்னான காலம் இது.
பெண்கள்: வாழ்க்கைத்துணை உங்கள் செயல்வெற்றிக்கு மிகுந்த பக்கபலமாக இருப்பார். அவருடைய உடல்நிலையில் அக்கறை அவசியம். அவரது பெயரில் சேமிப்பில் ஈடுபட வாய்ப்புகள் உருவாகும்.
ஆரோக்கியம்: உடல்நிலை பாதிப்பு ஏதும் இருக்காது. கண்பார்வையில் சிரமம் தோன்றக்கூடும். நடை பயணம், உடற்பயிற்சிகள் மூலம் சிறு சிறு பிரச்னைகளையும் விரட்டலாம்.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள், தோல், சிமென்ட், இரும்பு, கம்பி, பழைய சாமான்கள் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் தனித்துவத்தை நிரூபிப்பார்கள்.
பரிகாரம்: வருடப்பிறப்பன்று அருகில் உள்ள அம்பிகை ஆலயத்திற்குச் செல்லலாம். தினமும் வீட்டில் துளசிச்செடிக்கு வழிபாடு செய்வது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்கலாம்.
துலாம்
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சிரமங்களையும், குழப்பங்களையும் சந்தித்த உங்களுக்கு இந்த புத்தாண்டு வெற்றி தரும் வகையில் அமையும். குழப்பங்கள் விலகி நன்மை உண்டாகும். பூர்வீகத்தை விட்டு இடம் பெயர்ந்து வந்தவர்கள் மீண்டும் பூர்வீகம் திரும்புவர். வரும் ஆண்டு பொதுவாக நன்மை தரும் என்றாலும் சில சோதனைகளையும் சந்திக்க உள்ளீர்கள். ஞாபக மறதியால் அதிகம் அவதிப்பட நேரிடும்.
முக்கியமாக நகை, பணம், சொத்துப் பத்திரங்கள், தஸ்தாவேஜூகளை கையாளும் போது மிகுந்த கவனம் அவசியம். எதையும் எழுதி வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. மன உளைச்சலால் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதோடு அதிக அலைச்சலுக்கு ஆளாவீர்கள்.
மனதில் ஸ்திரத்தன்மை உருவாகும். தைரியத்துடன் மனதிற்கு சரியென்று பட்டதை தயங்காது செய்வீர்கள். விட்டு கொடுத்து செல்வீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். மன உறுதி அதிகரிக்கும். அதிகாரமான பேச்சால் கவுரவம் உயரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும்.
உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் வரும். வதந்திகளை நம்ப வேண்டாம். பிள்ளைகளால் கவுரவம் உயரும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர். அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து, சுபநிகழ்வுகள் நடைபெறும். வாழ்க்கை துணையின் பெயரில் உள்ள சொத்துகள் உருமாறும். பூர்வீக சொத்துகளில் சிலவற்றை விற்று புதிய சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
மாணவர்கள்: பாடங்களை அன்றன்றே எழுதி பார்ப்பது நல்லது. அயராது உழைத்தால் மட்டுமே நினைத்த வெற்றி கிடைக்கும். இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்கவுன்டன்சி, கேட்டரிங் டெக்னாலஜி, ஃபேஷன் டிசைனிங் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். இசை, நடனம், ஓவியம் பயில்பவர்களுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.
பெண்கள்: வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகளுக்கு துணை நிற்பீர்கள். இருவரும் இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி நிச்சயம். உங்கள் உடல்நிலையிலும் கவனம் தேவை. நேரத்திற்கு உணவருந்த இயலாமல் போகலாம். அவ்வப்போது வரும் டென்ஷனை குறைப்பது அவசியம்.
ஆரோக்கியம்: வாழ்க்கை துணையின் உடல்நிலையில் கவனம் அவசியம். காது, கால்வலி, வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். ஆரோக்கியமான உணவால் உடல் நிலையில் பெரிய பாதிப்புகளை தவிர்க்கலாம்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் ஸ்திரத்தன்மை இருக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வி பெறுவர். ஷேர்மார்க்கெட், புரோக்கர் தொழில், சிறுதொழில், கமிஷன், தரகு, ஏஜென்சீஸ் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கலைஞர்களுக்கு முன்னேற்றம் உண்டு.
பரிகாரம்: வருடப்பிறப்பன்று சிவாலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்யலாம். தினமும் காகத்திற்கு தயிர்சாதம் வைக்கலாம். தம்பதியராக திருக்கடையூர் சென்று அபிராமி, அமிர்தகடேஸ்வரரை தரிசித்து வரவும்.
விருச்சிகம்
துவக்கம் மந்தமாக இருந்தாலும் மனதில் நிம்மதி இருக்கும். காரிய தடைகள், மனக் குழப்பங்கள், பலவிதமான இன்னல்கள், இடம் விட்டு இடம் மாறுதல் போன்றவை இருக்கும். வீடு, வண்டி, வாகனம், மனை போன்ற சொத்துகள் சொந்தமாக இருந்தாலும் அதனை சரியான நேரத்திற்கு அனுபவிக்க இயலாத சூழல் இருக்கும், அதனால் விரக்தி உருவாகும்.
குடும்பத்தில் பிரச்னைகளை களைய பேச்சில் கவனம் அவசியம். தேவையற்ற வாக்குறுதிகளால் பொருளிழப்பு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உண்டாகும் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். பாகப்பிரிவினை போன்ற விஷயங்களில் விட்டு கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். உங்களால் லாபம் கண்டவர்கள் நீங்கள் செய்த உதவியை மறந்து போவார்கள். மற்றவர்களிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்காது.
அடுத்தவர்கள் போற்றும் வகையில் வாழும் நீங்கள் இந்த நேரத்தில் உறவினர் மத்தியில் அவப்பெயர் காணும் சூழல் உருவாகும். உறவினர்கள் அவ்வப்போது உங்களின் உதவியை நாடி வருவர். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய இயலாத சூழ்நிலை உண்டாகும்.
அநாவசிய பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் தராமல் கடமையை செய்து வாருங்கள். சில நேரத்தில் பயத்தால் முன் வைத்த காலை பின்வைக்க நேரும்.
இதனால் இழப்பு நேரும். தேடி வந்த வாய்ப்புகள் விலகி செல்லும். அடுத்தவர்களுக்காக நீங்கள் கடன்படும் சூழல் உருவாகக் கூடும். அடுத்தவர்களை நம்பி ஜாமீன் பொறுப்பேற்றல், கியாரண்டி கையெழுத்திடுவதை கட்டாயம் தவிர்க்கவும். வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும், எதிரிகளிடமும் அலட்சியம் கூடாது.
மாணவர்கள்: பொதுவாக கல்வியில் முன்னேற்றம் காண கடுமையான உழைப்பு அவசியம். அன்றாட பாடங்களை எழுதிப்பார்ப்பது, மாதிரித்தேர்வுகளையும் எழுதி பார்ப்பது நல்லது.
பெண்கள்: முடிந்த வரை தனிமையைத் தவிர்ப்பது, கூட்டு பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் அவசியம். குடும்ப விவகாரங்களை நெருங்கியவர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளவும்.
ஆரோக்கியம்: நேரத்திற்கு உணவும் மருந்தும் எடுத்து கொள்வது அவசியம். தேவையற்ற குழப்பங்களை தவிர்த்தால் உடல் நலத்தை பேணலாம். பாதத்தில் ஏற்படும் வெடிப்புகள், வலி போன்றவற்றால் பாதிப்புகள் உருவாகலாம்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடும்போது மிகுந்த கவனம் தேவை. ஷேர் மார்க்கெட், புரோக்கர், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தன லாபம் உண்டு. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாட்டை தவிர்க்க கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் கூடி வரும்.
பரிகாரம்: தினமும் காகத்திற்கு எள்ளுப்பொடி கலந்த தயிர்சாதம் வைப்பது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பகவானை தரிசிக்க நன்மை உண்டாகும். பிரதி சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்முடிச்சிட்ட விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம்.
தனுசு
சிறப்பான நற்பலன்களை அடைய உள்ளோரில் நீங்களும் ஒருவர். சங்கடங்கள் விலகி எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். ஜாதக பலம் சுமாராக உள்ளவர்களுக்கும் வாழ்க்கை தரம் உயர்வடையும். எதிலும் விடாமுயற்சியோடு செயல்படுவது நல்லது. நெடுநாட்களாக தடைபட்டு வரும் சுபநிகழ்வுகள் இல்லத்தில் இனிதே நடைபெறும். திருமணத் தடை கண்டவர்கள், குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் என அனைவருக்கும் தடை விலகி சுபநிகழ்வுகள் நடைபெறும். தனலாபம், தான்ய லாபம் உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்ப விவகாரங்களில் உங்களின் வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும். விரும்பிய உணவு வகைகளை ருசிப்பீர்கள்.
உடன்பிறந்தோரால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு உதவிகரமாய் செயல்பட வேண்டியிருக்கும்.
அவரது தொழில் முறையில் உங்களின் இணைவு விரைவான வெற்றியை பெற்று தரும். நண்பர்களுடன் இணைந்து செய்யும் பணிகள் விரைவில் முடியும். கிடைத்ததை அனுபவித்து தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நல்லதையே நினைத்து நற்பலன்களைக் காணுங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகள் சுணக்கம் நீங்கி உற்சாகமாகச் செயல்படுவார்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
நிலுவையில் உள்ள வழக்கு முடிவிற்கு வரும். கடன் சுமை காணாமல் போகும். நிலுவை தொகைகள் வசூலாகும். வண்டி, வாகனங்கள், வீடு, மனை போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் சேரும் நேரம் இது.
மாணவர்கள்: எழுத்துத்திறன் மூலம் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போட்டிகள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் முன்னிலை வகிப்பார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் பிரபலமடையும் யோகம் உண்டு.
பெண்கள்: சமூகசேவை, ஆன்மிகத் தொண்டு ஆகியவற்றில் நாட்டம் செல்லும். உயர்பதவியில் உள்ளோருடன் தொடர்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உங்களுடைய ஆலோசனையால் அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். உங்கள் கவுரவம் உயரும்.
ஆரோக்கியம்: நோயற்ற ஆரோக்கியமான உடல்நிலையைப் பெற்றிருப்பீர்கள். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு உடல் நிலையில் கூடுதல் அக்கறை அவசியம். முடிந்தவரை தனிமையைத் தவிர்த்து எங்கு சென்றாலும் தகுந்த துணையுடன் செல்வது நல்லது.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய வியாபாரிகள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள், கலைஞர்கள், மருத்துவத் துறையினர், நீதித்துறையினர், ஆசிரியர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் தொழிலில் தனலாபம் உண்டு.
பரிகாரம்: சனிக்கிழமை மற்றும் ஏகாதசி நாட்களில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று சேவிப்பது நல்லது. கருடாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும் போது திருப்பதிக்குச் சென்று கீழ்திருப்பதியில் இருந்து திருமலை வரை பாதயாத்திரையின் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய நன்மை உண்டாகும்.
மகரம்
புத்தாண்டு நற்பலன்களை தரும். வாழ்க்கை தரம் உயரும். இக்கட்டான சூழலில் வெற்றி கிடைக்க பொறுமை அவசியம். உங்கள் நிதானத்தால் தீய பலன்கள் அப்படியே தலைகீழாக மாறி சிறப்பான நற்பலன்கள் ஏற்படும். படபடப்பை தவிர்த்தால் காரியவெற்றி சாத்தியமாகும்.
இக்கட்டான சூழலில் விவேகமான செயல்பாடுகள் உங்களின் பெருமையை உயர்த்தும். பேச்சால் நற்பெயர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பர். பணிச்சுமை கூடும். நெருங்கிய உறவினர்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சந்திக்க நேரும். உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய இயலாது போகலாம். அதனால் சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் உண்டாகும். குடியிருக்கும் வீட்டில் மாற்றம் செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் செயல்களில் முன்னேற்றம் இருக்கும்.
வாழ்க்கைத்துணையின் பெயரில் அசையா சொத்துகளில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இக்கட்டான சூழலில் சுற்றத்தாருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அதிக அக்கறை கொள்வீர்கள். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறப்பு கவனம் அவசியம். அரசாங்க காரியங்கள் தடைபடும்.
பிதுரார்ஜித சொத்துகளால் தொழில் அபிவிருத்தி அடையும். பெற்றோர் உடல்நிலையில் அக்கறை தேவை. மிகவும் நெருங்கிய நபர் ஒருவரின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களை வந்து சேரும். செல்வ சேர்க்கையில் குறைவு உண்டாகாது. 2016ம் ஆண்டில் ஓயாத உழைப்பால் தனலாபம் காண வேண்டியிருக்கும்.
மாணவர்கள்: கல்வியில் தேக்கம் இருக்கும். பிராக்டிகல் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றாலும் தியரியில் சுணக்கம் இருக்கும். அக்கவுன்டன்சி, கேட்டரிங் டெக்னாலஜி, ஃபேஷன் டிசைனிங் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள்: வாழ்க்கை துணையின் வெற்றிக்கு பக்கபலமாக நிற்க வேண்டியிருக்கும். உங்களது ஆலோசனைகள் அவரை திறம்பட வழிநடத்திச் செல்லும். நண்பர்களின் நலனுக்காக சில தியாகங்களைச் செய்வீர்கள்.
ஆரோக்கியம்: பற்களில் சொத்தை, எலும்பு மஜ்ஜைகளில் பிரச்சனை, அல்சர், உடல் இளைத்தல், இருமல் தொந்தரவுகளால் உடல் நலம் பாதிக்கப்படும். உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அவசியம்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் சிறப்பான தனலாபம் உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு திறமையால் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் வியாபார யுக்தியால் வெற்றி காண்பார்கள். கலைஞர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: உழைக்கும் வர்க்கத்தினருக்கு மாதம் ஒரு முறை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை உங்களால் இயன்ற அன்னதானம் செய்யலாம். நேரம் கிடைக்கும்போது சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மனை தரிசித்து வருவது நன்மை பயக்கும்.
கும்பம்
கஷ்டங்கள் விலகி நற்பலன்கள் உண்டாகும். புத்துணர்ச்சி கூடும். எதிலும் சுபபலன் கிட்டும். தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். அடுத்தவர்களின் பொறுப்புகளையும் கூடுதலாக சுமக்க வேண்டியிருக்கும். தான, தருமங்களுக்காக கூடுதலாக செலவழிப்பீர்கள். ஆதரவற்றோருக்கு உதவுவீர்கள். கூடுதல் செலவு தவிர்க்கமுடியாததாகும். திருப்திகரமான வரவு தொடரும். ஆன்மிக ஈடுபாடு, நாட்டம், பெரியவர்களிடம் பணிவு ஆகியவற்றால் நற்பெயர் கிடைக்கும்.
எதிர்காலம் குறித்த திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். கடன்பட்டாவது அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யலாம். எதிரிகளின் பலம் அதிகரித்தாலும் அவர்களால் உங்களுக்கு பாதிப்பு வராது. பிரச்னைகளில் அதிகம் தலையிடாமல் அமைதி காப்பது நன்மை தரும்.
மனக்கவலைகளை மனதிலேயே பூட்டி வைத்துக்கொள்ளாமல் உங்கள் நலம் விரும்பிகளிடமும், நீங்கள் வழிகாட்டியாகக் கருதும் நபரிடமும் வெளிப்படுத்தி தெளிவு காணலாம். உறவினர்களால் தோன்றும் குழப்பங்களை மிகைப்படுத்தாது விட்டுவிடுவது நல்லது. பூர்வீக சொத்துகளில் புதிய வில்லங்கங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.
வாழ்க்கை தரத்தில் குறை நேராது. பிள்ளைகளால் பெருமை, கவுரவம் உயரும். வாழ்க்கைத்துணையின் உறவினர்களுக்கு உதவி செய்ய நேரிடும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் அவசியம். குடும்பத்தில் நிலுவையில் இருந்த சுப நிகழ்வு ஒன்று நடந்தேறும். பொதுவாக நிம்மதிக்கோ, சுகமான வாழ்க்கைக்கோ குறை நேராது.
மாணவர்கள்: கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களோடு கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கவனச்சிதறலை தவிர்ப்பது அவசியம்.
பெண்கள்: குடும்ப விஷயங்களை வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். குழந்தை மற்றும் வாழ்க்கை துணையிடம் அனுசரணை அவசியம். எந்த செயலை செய்தாலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது அவசியம். டென்ஷனை குறைப்பது அவசியம்.
ஆரோக்கியம்: ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படாது. தியானம், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவது மன நிம்மதி தரும். கால், பல், கண்களில் தோன்றும் சிறு பாதிப்புகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றம் இருக்கும். ஒரு சிலர் பதவி உயர்விற்காக சிறப்பு வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் நாட்டம் கொள்வார்கள். வியாபாரிகளுக்கு தொழிலை அபிவிருத்தி செய்ய கூடுதல் அலைச்சல் இருக்கும். நஷ்டப்பட வேண்டியிருக்காது.
பரிகாரம்: பகவத்கீதையை பொருளுணர்ந்து படிக்கலாம். பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம். நேரம் கிடைக்கும்போது அபிதகுசலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வர ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம்.
மீனம்
சாதக பாதகங்கள் கலந்திருக்கும். செயல்வேகம் கூடும். உரிய பரிகாரங்கள் செய்து சோதனைகளை கடந்து அற்புதமான நற்பலன்களை பெறலாம். சங்கடங்களின் தாக்கம் குறையும். முயற்சிகளில் தடை, உற்றார் உறவினர்களை விட்டுப் பிரிதல், உடல் நலக் குறைவு, நற்பெயருக்குக் களங்கம் போன்றவை தவிர்க்க இயலாதது.
ஆனாலும் ஜனன ஜாதக ரீதியாக சிறப்பான தசாபுக்தி நடப்பவர்களுக்கு இந்த பலன்களின் தாக்கம் குறையும். நினைத்த காரியம் எளிதில் நடைபெறாமல் இழுபறி தரும். இது சுற்றியுள்ளவர்கள் மீது கோபமாக திரும்பும். குடும்பத்தினரோடு கருத்து வேறுபாடு தோன்றும். இதனால் உங்களை நேசிப்பவர்களும் உங்களை விட்டு விலகி செல்வார்கள். பேச்சில் கடுமை வெளிப்படும். விரும்பிய உணவுகளை உட்கொள்ள இயலாது போகும். மனதில் விரக்தி ஏற்படும்.
பொருளாதார முன்னேற்றத்தில் சுணக்கம் இருக்கும். மறதியால் அதிமுக்கியமான பொருட்களை எங்காவது வைத்துவிட்டு அல்லல்பட நேரிடும். தொலைதூர பிரயாணத்தின் போது பொருளிழப்புக்கான வாய்ப்புள்ளதால் சரியான துணையுடன் செல்வது நல்லது.
அடுத்தவர்களுக்காக கடன் வாங்கவோ, கொடுக்கவோ செய்தால் அதனை திரும்ப பெற இயலாமல் போகும். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும்போது ஏமாற்றப்படக்கூடும். சிரமமான நேரத்தில் எந்த ஒரு செயலையும் வாழ்க்கைத்துணையின் ஆலோசனைபடி செய்து வாருங்கள்.
வீண் விரயத்தை தடுக்க சேமிப்பில் ஈடுபடுவதும், அசையா சொத்துக்களாக வாங்கி வைப்பதும் நல்லது. பூர்வீக சொத்துகளில் புதிய வில்லங்கங்கள் உருவாகும். சோதனைகளை நினைத்து வருந்தாது கடமையைச் சரிவர செய்தால் வெற்றி நிச்சயம்.

மாணவர்கள்: கல்வியில் முன்னேற்றம் காண கடின உழைப்பு அவசியம். அறிவாளிகளாக இருந்தாலும் ஞாபகமறதியால் தேர்வில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் சிந்தனை சிதறல், மனம் ஒரு நிலைபடாமல் அலைபாய்வது, வீண் குழப்பத்தை தவிர்க்க மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். முக்கியமாக தேர்வு எழுத கிளம்பும்போது விநாயகரை வணங்கிவிட்டு செல்வது நல்லது.

பெண்கள்: நீங்கள் வெறுப்பை காட்டினாலும், உங்களை புரிந்துகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களை உங்கள் வாழ்க்கை துணை செய்து முடிப்பார். அவரது வார்த்தைகள் உங்களுக்கு புதிய தெம்பூட்டும். குடும்பத்தினரிடம் தேவையற்ற கோபத்தை தவிர்த்தால் உங்களுக்கும் குடும்பத்திலும் நிம்மதி கூடும்.
ஆரோக்கியம்: விரக்தி மற்றும் ஞாபக மறதியால் அடிக்கடி அவதிப்படுவீர்கள். தியானம், யோகா பயிற்சிகளால் உ்டல்நலம் கூடும். சளி இருமலுக்கு கூட சுயமாக மருந்து எடுத்துகொள்வதை தவிர்க்கவும்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் அனுகூலம் உண்டு. சிறு லாபத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம்.
பரிகாரம்: தினமும் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வைத்து வணங்குவது நலம். நேரம் கிடைக்கும்போது குடும்பத்துடன் நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment