தொலைக்காட்சி!!

Monday, October 12, 2015

பொம்பிளை சிவாஜி!


சிறுதாவூரில் இருந்து இன்று பிற்பகலில் சென்னை வந்த முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் தி.நகர் சென்று மனோரமாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, மனோரமா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
எனக்கும், மனோரமாவுக்கும் இருந்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது.
திரையுலகில் எனது மூத்த சகோதரியாக விளங்கியவர் மனோரமா. நடிப்பில் மேதையான மனோரமாவை பெண் நடிகர் திலகம் என்றே சொல்லலாம். எம்ஜிஆர், சிவாஜியின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் மனோரமா.
மேலும், தமிழ் திரையுலகில் மனோரமாவை போன்ற சாதனையாளர் இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகை மனோரமா (78), கடந்த சில மாதங்களாகவே மனோரமா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு, அவருடைய உயிர் பிரிந்தது.
அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவரது மறைவுக்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
மனோரமாவின் மறைவால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒரு சகாப்தமாக விளங்கிய, ஆச்சி என்ற அன்பு அடைமொழியோடு அழைக்கப்பட்ட மனோரமா நேற்று இரவில் மாரடைப்பால் இறந்தது தமிழ் திரையுலகினரையும் மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நகைச்சுவை, குணச்சித்திரம், முதுமையில் நடித்த அம்மா வேடம் பாட்டி பாத்திரம் என எல்லாவற்றிலுமே தனது அலாதியான, உணர்ச்சி முகத்தில் கொப்பளிக்கும் நடிப்பால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
இவர் எப்படி நடித்தாலும் ரசிகர்களுக்கு பிடித்துப்போகவே நீண்டகாலம் திரையுலகில் நீடித்திருந்தார். பொம்பள சிவாஜி என்றே புகழப்பட்டார்.
ரஜினி, கமல் உட்பட மிகப்பெரிய நடிகர்களை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலசந்தர், ’நீங்கள் மனோரமா ஒருவரை அறிமுகப்படுத்தியதற்கு, நான் இத்தனை பேரை அறிமுகப்படுத்தியது ஈடில்லை’ என்று மனசாட்சியை தைரியமாக கண்ணதாசனிடன் கூறி வெளிப்படுத்தினார்.
முதன்முதலாக கண்ணதாசன் தயாரித்த ’மாலையிட்ட மங்கை’ (1958) படத்தில்தான் முக்கிய வேடத்திலும் நடித்தார்.
படகோட்டி, அன்பே வா, தில்லானா மோகனாம்பாள், எங்கள் தங்கம், பட்டிக்காடா பட்டணமா, பொம்மலாட்டம், பில்லா, சவால், சம்சாரம் அது மின்சாரம், சின்னதம்பி, கிழக்கு வாசல், நடிகன், இது நம்ம ஆளு, சின்னகவுண்டர், பாட்டி சொல்லை தட்டாதே, புதிய பாதை என வெவ்வேறு விதமாக 1200 படங்களில் நடித்து கின்னஸில் இடம் பெற்றுள்ளார்.
மனோரமா நாகேஷ் ஜோடிப் பொருத்தம் 1960 களில் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். 1970 க்குப் பிறகு கருத்துவேறுபாட்டின் காரணமாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
என்றாலும், மனோரமா தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, குமரிமுத்து போன்ற நகைச்சுவை நடிகர்களோடும் ஜோடி சேர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர்.
இவர் நாடக நடிகராக எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். கருணாநிதி இவர்களோடு மேடைகளில் நடித்துவிட்டு சினிமாவில் புகுந்தவர் என்பதால் 1000 நாடகங்களிலும் நடித்திருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பிரபலமான பல பாடல்களையும் பாடியுள்ளார்.
அகன்ற முகம் அதில் சிறிய மூக்கு கட்டுடலும் கட்டைத்தன்மையுமான தோற்றம் பந்துபோன்ற இயக்கம் வெண்கல குரல் முழக்கம் என படங்களில் ஒன்றித் தெரிவார். ரசிகர் மனங்களில் தனி இடம் பெறுவார்.
எல்லோரையும் காதல்கொள்ள வைக்காத தோற்றம் என்பதால், நடிப்பை கருத்தில் கொள்ள செய்தது.
மனோரமா 1937 மே 26 ல் தஞ்சாவூர் மாவட்டமான மன்னார்குடியில் பிறந்தார். இப்போது தனது 78 வது வயதில் இயற்கை எய்திருக்கும் இவருக்கு 1943 லிருந்து 2015 வரையிலுமே வீரியகாலம் எனலாம்.
கமலின் ’தசவதாரம்’ படத்தில் நாகேஷுக்கு ஜோடியாக நடிக்க கமல் அழைத்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் மனோரமா மறுத்துவிட, அதில் கே.ஆர். விஜயா நடித்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அரசியலில் நுழைந்து தேர்தல் நேரத்தில் ரஜினியை கடுமையாக விமர்சித்தார். தமிழக மக்களால் அது மறக்க முடியாதது. துரதிர்ஷ்டவசமாக அந்த தேர்தலில் அதிமுக தோல்வியும் கண்டது.
இவருடைய இயற்பெயர் கோபிசாந்தா, இவருக்கு 1964 ல் எஸ்.எம். ராமநாதன் என்பவருடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டின் காரணமாக 1966 ல் விவாகரத்தானது. இவருக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார்.
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ’புதிய பாதை’ படத்தில் சிறந்த ஆதரவு (supporting) நடிகருக்கான தேசிய விருது 1989 ல் கிடைத்தது.
தமிழக அரசின் கலைமாமணி விருதும். 2002 ல் பத்மஸ்ரீ விருதும் உட்பட ஏராளமான விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசி கிளாக்குடையார் மனோரமாவின் தாயின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார். இதனை அடுத்து கணவனால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் மனோரமாவுடன் வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார்.ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.[6] அங்கு அவர்கள் பலகாரம் சுட்டு விற்பனை செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.] தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்ட அவர் நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.
ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம், தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார். மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.
நடிகை மனோரமா கூறியதாவது:-
'எனக்கு இரண்டு வயது இருக்கும். மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை, ஓரளவு நயத்தோடு பாடினால் எந்த தாய்க்குதான் மகிழ்ச்சி பொங்காது!
தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன் முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அன்று முதல் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் அருகே அழைத்து வைத்துக்கொண்டு, 'பாப்பா! ஒரு பாட்டு பாடு' என்று சொல்வார்கள். நானும் பாடுவேன்.
படிப்படியாக இந்த 'பாடும் வித்தை' எப்படியோ என்னை விடாமல் ஒட்டிக்கொண்டது. மற்றவர்களுக்கு பாடிக்காட்டி, பாடிக்காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்து விட்டது.'
இவ்வாறு மனோரமா கூறினார்.
அதன் பிறகு மனோரமாவின் பாடல் நிகழ்ச்சி, பல வீடுகளின் விசேஷங்களில் முக்கிய இடம் பிடித்தது.
பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு முறை `பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாட்டை, 'மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாட்டின் மெட்டில் பாடி ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற்றார்.
அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூட விழாக்கள், சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மனோரமாவை அழைத்துச்சென்று பாட வைத்தார்கள்.
பள்ளிக்கூடத்திற்கு சென்று திரும்பியதும், மனோரமா சினிமா 'டூரிங்' கொட்டகைக்கு சென்று பலகாரம் விற்பார்.
அங்கே பலகாரம் விற்பதுடன், எந்த காட்சியிலும், எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்கும் இலவச அனுமதியும் கிடைத்தது. 'பாட்டுப் பாடுற பொண்ணு! படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டு விடுவார்கள். அதனால் மனோரமாவும் இடை, இடையே தியேட்டருக்குள் சென்று பாடல் காட்சிகளை பார்த்து விட்டு வருவார்.
இப்படியே தியேட்டரில் படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டும் அவருடைய இசை ஞானம் வளர்ந்தது.
இந்த நிலையில் மனோரமாவுக்கு மீண்டும் ஒரு சோதனை வந்தது. அவருடைய அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மனக்கவலை, வறுமை, கடுமையான உழைப்பு இவை அனைத்தும் சேர்ந்து நோயாக மாறியது.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தனது தாயாருக்கு துணையாக மனோரமா இருந்தார். ஒரு ஆண்டு சிகிச்சை பெற்ற பின்னர்தான் மனோரமாவின் தாயார் குணம் அடைந்தார்.
அதன் பின்னர் மனோரமாவின் தாயாருக்கு வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, பள்ளத்தூரில் வசதி படைத்த செட்டியார் வீடுகளில் மனோரமாவை வேலைக்கு சேர்ந்துவிட முடிவு செய்தார்.
இதனால் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ள மனோரமாவை அனுப்பி வைத்தார்.
இரண்டு மாதங்கள் அங்கு வேலை பார்த்தார். பின்னர் வேலையை விட்டு விட்டார். மனோரமாவும், அவர் தாயாரும் மிகவும் சிரமப்பட்டனர்.No comments:

Post a Comment