Monday, August 3, 2015

தலிபான் தீவிரவாதிகள் -ஐ.எஸ் தீவிரவாதிகளோடு மோதும் நிலை: இன்னும் பரபரப்பு !

அக்பானிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த தலிபான் தீவிரவாதிகளை அடக்க அமெரிக்கா அன் நாட்டை கைப்பற்றியது. அதுபோக பின்னர் பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அந்த தீவிரவாத அமைப்பு பெரும் பலத்தை இழந்து முடங்கிய நிலை தோன்றியது. இந்த சைக்கிள் காப்பில் தால் சில முஸ்லீம் தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசத்தை அமைப்பதாக கூறி , இஸ்லாமிய ஆர்மி என்ற ஐ.எஸ் -ஐ.எஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் தற்போது ஆக்பானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் தமது பகுதிகளில் இருந்து ஐ.எஸ் அமைப்பினர் விலகாவிட்டால் , அவர்கள் மீது போர் தொடுக்க தாம் தயங்கப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
இது ஒரு அமெரிக்காவின் சித்து விளையாட்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா ஐ.எஸ் படைகளோடு நேரடியாக மோதாமல் , தலிபான்களை ஏதோ ஒருவகையில் தூண்டி விட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இனி இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டியது தான். அதில் அமெரிக்கா நன்றாக குளிர் காயும்.

No comments:

Post a Comment