தொலைக்காட்சி!!

Monday, August 3, 2015

அமெரிக்கா கொல்ல துடிக்கும் நபர் இவர் தான்: சில செக்கனில் எப்படி எஸ்கேப் ஆனார் ?

நீங்கள் இங்கே புகைப்படத்தில் பார்கும் நபர் பெயர் ஜுனைட் ஹுசைன்(21). இவர் இன்ரர் நெட்டில் காதலித்து 45 வயதான பாடகி ஒருவரை மணம்முடித்துள்ளார். பிரிட்டனில் வாழ்ந்து வந்த இவர் கம்பியூட்டர் ஹக்கர் ஆவார். 2012ம் ஆண்டு முன் நாள் பிரதமர் டோனி பிளயரின் ரகசியங்களை அரசு வலைப் பின்னலில் இருந்து திருடியமைக்காக பிரித்தானியப் பொலிசார் இவரைக் கைது செய்தார்கள். பின்னர் விடுதலையான இவர் , 2013ல் அமெரிக்காவின் பாதுகாப்பு மையமான பெண்டகன் மேல் கைவைத்தார். பெண்டகனில் உள்ள கம்பியூட்டரையே இவர் ஹக் செய்து(ஊடறுத்து) சில முக்கிய தகவல்களை எடுத்துவிட்டார். இதனை சில நொடிகளில் உணர்ந்த பெண்டகன், அவர் எங்கே இருந்து இயங்குகிறார் என்பதனைக் கண்டறிய சில நிமிடங்கள் எடுத்தது. அமெரிக்காவிடம் இருந்து பறந்து வந்த தகவலை அடுத்து பிரித்தானியப் பொலிசார் குறித்த இடத்திற்குச் சென்றால் அங்கே எவரும் இல்லை.
ஹுசைன் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். பின்னர் அவர் எப்படி என்று தெரியவில்லை அங்கிருந்து சிரியா சென்று ஐ.எஸ் தீவிரவாதிகளோடு இணைந்துகொண்டார். சில நாட்களுக்குப் பின்னரே லண்டனில் உள்ள பொலிசாருக்கு தெரியவந்தது ஹுசைன் தான் அமெரிக்க பெண்டகன் கம்பியூட்டரை ஹக் செய்தார் என்று. உடனடியாக சல்லடை போட்டு அவரை தேடினால். அவர் ஹித்-ரூ விமான நிலையம் ஊடாக சிரியா சென்றுவிட்ட தகவல் கிடைத்தது. இனி எங்கே அவரைப் பிடிக்க முடியும் என்ற நிலை தோன்றுயது. அமெரிக்கா தான் சுட்டுக் கொல்லவேண்டிய ஆட்களின் பட்டியலை பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. முதலாவதாக ஜிகாடி ஜோன் எனப்படும் நபர். இவரே முகமூடி அணிந்துகொண்டு பல அமெரிக்கர்கள் கழுத்தை வெட்டிக் கொலை செய்தார். இரண்டாவது நபர் ஐ.எஸ் இயக்க தலைவர் அல் பஹாடி. மூன்றாவதாக தாம் கொலைசெய்ய துடிப்பது ஹுசைனைத் தான் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கையில் கிடைத்த நபரை பிரித்தானிய பொலிசார் நழுவ விட்டு விட்டார்கள். 2012ல் அவர் கைதானபோதே முறையாக விசாரித்து இருந்தால் பல உண்மைகளை அவர்கள் கண்டறிந்திருப்பார்கள்.
தற்போது சிரியாவில் இவர் ஆட்டம் போடுகிறார் பாருங்கள்,

No comments:

Post a Comment