தொலைக்காட்சி!!

Monday, August 3, 2015

நடுரோட்டில் சுவிஸ் தேசிய கொடியை எரித்த போராட்டக்காரர்கள்: கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தல்

சுவிட்சர்லாந்தில் இனவெறிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் அந்நாட்டின் தேசிய கொடியை எரித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
சுவிஸின் பெர்ன் மண்டலத்தில் கடந்த ஆகஸ்ட் 1ம் திகதி இனவெறிக்கு எதிராக திரண்ட நூற்றுக்கணக்கான நபர்கள் அரசின் எல்லைப்புற கொள்கைகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
Bundesplatz என்ற பகுதியில் நடைப்பெற்ற இந்த போராட்டத்தில் சிலர் முகமூடிகள் அணிந்துக்கொண்டும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, கூட்டத்தில் இருந்த இரண்டு நபர்கள் சுவிஸின் தேசியக்கொடியை எடுத்து பொதுமக்களுக்கு காட்டியவாறு அதற்கு தீயிட்டு கொளுத்தினர்.
இந்த செய்கையை சிலர் பாராட்டி கை தட்டினாலும் கூட, பல போராட்டக்காரர்கள் இந்த செயலைக்கண்டு அமைதியாக இருந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பெர்ன் மண்டல நாடாளுமன்ற உறுப்பினரான Thomas Fuchs, போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் தேசிய கொடியை எரித்ததன் மூலம் அவர்கள் எல்லையை தாண்டியுள்ளது தெளிவாக தெரிகிறது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் காரணம் நியாமானது தானா என பொதுமக்களிடம் அவர்கள் ஏன் பேச்சு நடத்தவில்லை என்பது தான் ஆளும்கட்சிக்கு வியப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Freiburg பல்கலைகழக பேராசிரியரான Franz Riklin கூறுகையில், போராட்டக்காரர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கல் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
அதேபோல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசிய கொடியை எரிக்கலாம் என்ற எந்த விதிமுறையும் இல்லை.
போராட்டக்காரர்களின் இந்த செயலால் அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் அதன் இறையாண்மையையும் அவமதித்து விட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment