தொலைக்காட்சி!!

Wednesday, August 5, 2015

பேஸ்புக்கால் யாழ் யுவதிக்கு லண்டனில் நேர்ந்த கதி!

அமெரிக்காவில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் ஒருவனின் பேஸ்புக் காதலில் சிக்கி யுவதியொருவர் சின்னாபின்னமாகியுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் யுவதியே வாலிபனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஏமாற்றத்தால் யுவதி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

வாலிபனுடன் காதல் வசப்பட்டு, இணையத்தில் தனது உடலை காட்டியுள்ளார் யுவதி. இவற்றை வாலிபன் படம்பிடித்துள்ளான். பின்னர் வாலிபனை பற்றி அறிந்து கொண்ட யுவதி, அவனை விட்டு விலக முயன்றுள்ளார். எனினும், படங்களை வைத்து யுவதியை மிரட்டிய வாலிபன் அவரை தனது பிடியை விட்டு விலகவிடாமல் வைத்திருந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த யுவதி தற்கொலை முயற்சி எடுத்துள்ளார் .
இந்த வாலிபன் மட்டக்களப்பின் பிரபல அரசியல்வாதியும் , தொழில் அதிபருமான ஒருவரின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவில் விமான கட்டுமான பொறியியல் துறையில் கல்வி பயின்று வருகின்றார்.

No comments:

Post a Comment