தொலைக்காட்சி!!

Tuesday, August 4, 2015

அடுத்த பிரமராகும் வாய்ப்பு .....

இலங்கையின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு மஹிந்த ராஜபக்சவவை விட ரணில் விக்கிரமசிங்கவிற்கே அதிகளவில் வாய்ப்பு உள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விடயங்களில் இலங்கை வாக்காளர்களின் அபிப்பிராயம் மற்றும் அணுகுமுறைகளை அடையாளங்காணும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நீதியானதும் நியாமானதுமான நடைபெறமாட்டாது என நான்கு வீதமான மக்கள் தெரிவித்துள்ள அதேவேளை, 66 வீதமான மக்கள் இந்தத் தேர்தல் நீதியானதும் நியாயமானதுமாக நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் பொருத்தமான பிரதமர் யார் என்ற கேள்விக்கு அதிகளவிலான மக்கள் ரணில் விக்கிரமசிங்க என்று குறிப்பிட்டுள்ளனர்.
62.3 வீதமான தமிழர்களும் 71.1 வீதமான மலையக மக்களும், 62.3 வீதமான முஸ்லிம் மக்களும் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் பதவிக்குப் பொறுத்தமானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஒவ்வொரு சமூகத்தில் இருந்தும் 2 வீதத்திற்கும் குறைவானவர்கள் மஹிந்த ராஜபக்சவே பிரதமர் பதிவிக்குப் பொருத்தமானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பது தொடர்பில் பிளவுபட்ட கருத்துக்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்சவே பொருத்தமானவர்கள் என 57.8 வீதமான சிங்களவர்களும் 31.9 வீதமான சிங்கள மக்கள் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவர் எனத் தெரிவித்துள்ளனர்.
மேல், மத்திய, வடக்கு, கிழக்கு, வடமேற்கு, ஊவா, சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அநேகமான இலங்கையர்கள் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தெரிவு செய்வதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தெற்கு, வடமத்திய மாகாணங்களிலுள்ள மக்கள் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டுமா என்பதில் இலங்கையர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகள் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என 40 வீதமான மக்கள் கருதுவதாகவும் போட்டியிடக்கூடாது என 42 வீதமான மக்கள் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 வீதமான சிங்கள சமூகத்தினர் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட வேண்டுமென கருதும் அதேவேளை, 14.8 வீதமான தமிழர்களும் 8.4 வீதமான மலையகத் தமிழர்களும் 8.2 வீதமான முஸ்லிம் சமூகத்தினரும் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாகக் குரல்கொடுத்திருந்தனர்.
அடுத்த இலங்கை நாடாளுமன்றம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், நாட்டின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தல், கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வாக்காளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தலில் போட்டியின் வேட்பாளர்கள் நாட்டுக்காக செயற்பட வேண்டும் என 19.4 வீதமானவர்களும், கல்விக்காக செயற்பட வேண்டும் என 17.5 விதமானவர்களும், ஊழல் அற்ற வகையில் இருக்க வேண்டும் என 13.5 வீதமானவர்களும் கருதுகின்றனர்.
நாட்டிலுள்ள ஏனைய நான்கு சிறுபான்மை இனக்குழுக்களுக்கிடையில் இவ்வாறான கருத்துக்கள் காணப்படுவதுடன், தமிழ் சமூகம் மற்றும் மலையக தமிழ் சமூகத்திற்கு இடையில் கல்வி முக்கியமான ஒரு விடயமாக கருதப்படுகின்றது.


GE-2015-infographic-1_final-714x1024GE-2015-infographic-2_final-714x1024

No comments:

Post a Comment