Tuesday, August 4, 2015

ஃபேஸ்புக் வாசகர்களை அதிகரிக்க புதிதாக அறிமுகப்படுத்திய பிளேன் இதுதான்


சமூக வலைத்தளமான பேஸ்புக், உலகில் இன்டர்நெட் இணைப்பு சரிவர கிடைக்காத பகுதிகளில் இன்டர்நெட் சேவை வழங்குவதற்காக புதிய விமானத்தை உருவாக்கி உள்ளது. அக்குலியா எனப்படும் இந்த குட்டி விமானம் சூரியசக்தியில் இயங்கக் கூடியதாகும். தயாரிப்பு பணி முடிந்துவிட்ட இந்த விமானத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் பரிசோதனைக்கு கொண்டுவர பேஸ்புக் முடிவு செய்துள்ளது. போயிங்737 விமானத்தின் அளவு இறக்கை கொண்டது. ஆனால் விமானத்தின் எடை ஒரு காரின் எடையைவிட குறைவாக இருக்கும். ஒளிவடிவில் தகவல் பரிமாற்றம் செய்யும் முறையில் பேஸ்புக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
பரிசோதித்துப் பார்க்கும்போது வெற்றி கிடைத்தால் ஒரு வினாடிக்கு 10 ஜிபி அளவுள்ள தகவல்களை பரிமாற்றம் செய்யலாம். இது இதற்கு முன் எப்போதும் இல்லாத தகவல் பரிமாற்றம் வேகமாக இருக்கும். 10 மைல் தொலைவில் இருந்து இந்த தகவல் பரிமாற்றம் சாத்தியம் என்று பேஸ்புக் நிறுவனர் சூக்கர்பெர்க் கூறி உள்ளார். 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபடி, தொடர்ந்து சிலமாதங்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்கும் திறன்பெற்றது இந்த விமானம். ஏல் மாகுரி என்ற நிறுவனம் இந்த விமானத்தை வடிவமைத்து வழங்கி உள்ளது.
கீழே உள்ள செய்தியை படிக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

No comments:

Post a Comment