Friday, July 31, 2015

சேர்பியா நாட்டில் நஷனல் லாட்டரி தில்லு முல்லு TV இல் சிக்கிக் கொண்டது எப்படி ?


சேர்பியா நாட்டில் உள்ள மக்கள் , கொதித்து எழுந்துள்ளார்கள். இது ஏதோ புரட்ச்சி என்று நினைத்துவிட வேண்டாம். அன் நாட்டில் இயங்கிவரும் தேசிய லாட்டரி செய்த தில்லு முல்லு தான் இதற்கு காரணம். லாட்டரி பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் 1 தொடக்கம் 39 அல்லது 49 பந்துகளை ஒரு வட்ட பிளாஸ்டிகில் போட்டு குலுக்கி அதில் இருந்து வெளியாகும் 6 இலக்கங்களை வெற்றி பெற்ற இலக்கங்களாக அறிவிப்பார்கள். இதனை அதிகமாக நேரடியாக தொலைக் காட்சியில் கூட பார்கலாம். இந்த 1 முதல் 49 நம்பர்களில் 3 நம்பரைக் கூட வருசையாக எடுப்பது மிகவும் கடினமான விடையம். ஆனால் நேற்று நடந்த சீட்டிழுப்பில் , கடைசியாக விழ இருந்த நபரை , TV நிலையம் சற்று முன்னரே காண்பித்து விட்டது.
அது போக இது தான் அந்த நபர்கள் என்று அவர்கள் சற்று முன் காட்டி விட்டார்கள். ஆனால் இன்னும் குலுக்கல் முடிவடையவில்லை. இதனால் தேசிய லொத்தர் சபையும் , TV நிலையத்தில் உள்ளவர்களும் பேசி ஒரு உடன்படிக்கையின் கீழ் தான் இதனை தில்லு முல்லாக நடத்தி வருகிறார்கள் என்றும். எந்த நபர் விழவேண்டும் என்பது இவர்களுக்கு முன்னரே தெரியும் என்றும். அந்த இயந்திரத்தில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றும் மக்கள் கொதித்து போய் உள்ளார்கள்.

No comments:

Post a Comment