Friday, July 24, 2015

சித்திரத்தில் அசைந்த மேரி மாதாவின் உதடுகள்: தேவாலயத்தில் ஏற்பட்ட பரபரப்பு (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவில் தேவாலயத்தில் மேரி மாதாவின் சித்திரத்தில் உதடுகள் அசைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செயின்ட் செர்பல் தேவாலயம் உள்ளது. இங்கு மேரி மாதா கையில் குழந்தையுடன் இருப்பது போன்ற சித்திரம் உள்ளது.
இந்நிலையில் சித்திரத்தில் உள்ள மேரி மாதாவின் உதடுகள் அசைவதாக சிலர் கூறியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஜார்ஜ் ஆக்ராய் என்பவர் இந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் இது பற்றி அவர் கூறியதாவது, நான் பல முறை பிரார்த்தனைக்கு வந்து செல்லும் போது உதடுகள் அசைவதை பார்த்துள்ளேன். அதை நிரூபிப்பதற்காகவே இதை படம் பிடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment