Thursday, July 30, 2015

நாளை மீண்டும் வானில் ஒரு அதிசயம். (படம் இணைப்பு)


ஆனால் சில நேரங்களில் ஒரு மாதத்தில் 2 பவுர்ணமி வருவதும் உண்டு. இதை வானில் நிகழ்கிற அதிசய நிகழ்வாகத்தான் கருத வேண்டி உள்ளது. ஒரு மாதத்தில் 2 பவுர்ணமி நிகழ்கிறபோது, 2�வது பவுர்ணமி ‘நீல நிலவு’ (புளூ மூன்) என அழைக்கப்படுகிறது.

கடந்த 2�ந் தேதி பவுர்ணமி வந்தது. இப்போது மீண்டும் நாளை (31�ந் தேதி) பவுர்ணமி வருகிறது. நிலவு, முழு நிலவாக தோன்றும். இது நீல நிலவு ஆகும். (நீல நிலவு என்று கூறினாலும், நிறத்துக்கும், பவுர்ணமி நிலவின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.)

ஒரே மாதத்தில் 2 பவுர்ணமி வருவது, அதாவது நீல நிலவு வருவது அபூர்வமானது என்று ஐதராபாத்தில் உள்ள பி.எம்.பிர்லா அறிவியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் சித்தார்த் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் ‘‘நேற்று (29�ந் தேதி) தொடங்கி ஆகஸ்டு மாதம் 6�ந் தேதி இடையே ‘டெல்டா அக்குவாரிட் விண்கற்கள்’ பொழிவு இருக்கும். ஆனால் பவுர்ணமி காரணமாக விண்கற்கள் பொழிவை பார்ப்பதற்கு சாதகமான சூழல் இல்லை’’ எனவும் அவர் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.
30 Jul 2015

No comments:

Post a Comment