Friday, July 24, 2015

கைதுசெய்யப்பட்ட பின்னர் இறந்த கறுப்பினப் பெண்: அமெரிக்காவில் மீண்டும் கொலை ?


டெக்ஸாஸில் இறந்த கறுப்பு இன பெண்ணின் மரணம் குறித்து புலனாய்வு செய்யும் அமெரிக்க பொலிஸ் விசாரணையாளர்கள், அவர் கைது செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். வீதியில் ஒரு வரிசையில் இருந்து அடுத்த வரிசைக்கு மாறும் போது , சிக்னல் போடவில்லை என்று "சண்டிரா பிளண்ட்" என்னும் பெண்ணை பொலிசார் மறித்துள்ளார்கள். இதனையே பொலிஸ் கமராவும் காட்டுகிறது. தன்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்று ,அவர் திரும்பத் திரும்ப கேட்டதை அடுத்து அங்கு போலிஸ் அதிகாரியுடனான வாக்குவாதம் திடீரென அதிகரித்தது.
ஆனால் அங்கே நின்ற பொலிசார் தமது காரில் உள்ள கமரா , பிடிபடாத இடத்திற்கு அந்தப் பெண்ணை நகர்த்திச் சென்று வாய் தர்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் பேசுவது கூட பதிவாகியுள்ளது. குறித்த பெண் பின்னர் , சிறையில் தூக்கிட்டுக்கொண்டார் என்று பொலிசார் கூறுகிறார்கள். ஆனால் ஒளிப்பதிவில் உள்ள பல தொடர்ச்சியற்ற இடைவெளிகள் அந்த வீடியோ எடிட் பண்ணப்பட்டுள்ளதை காண்பிக்கிறது. இதனால் அவரது குடும்பத்தினர் ஒரு சுயாதீன விசாரணை கோரியுள்ளனர். சமீபகாலமாக அமெரிக்காவில் நிறவெறி அதிகரித்து வருகிறது. பொலிசார் அடிக்கடி கறுப்பின மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

No comments:

Post a Comment