கடும் புயலுக்கு இடையே கே.எல்.எம். ஆசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் தரையிறங்கிய, பரபரப்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ஒசாகாவில் இருந்து பயணிகளை ஏற்றிசென்ற, கே.எல்.எம். ஆசியா ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் விமானம் ஜூலை 25-ம் தேதி ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியபோது பலத்த புயல் காற்று வீசியது. பலத்த காற்றுக்கு இடையே சிக்கிக் கொண்ட விமானமானது, அங்கும் இங்கும் சென்றவாறு சென்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. காட்சிகள் அனைத்தும், அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புடன் உள்ளது. விமானமானது காற்றுக்கு இடையே அங்கும், இங்கும் சென்றவாறு தரையில் பலமாக, சக்கரங்களை பதித்த வண்ணம் வேகமாக செல்கிறது. மிகவும் மோசமான சூழ்நிலையில், விமானம் பத்திரமாக ஓடுதளத்தின் இறுதிக்கு சென்று நின்றது.
சமூக வலைதளங்களில் வீடியோவானது வைரலாக பரவிவருகிறது. வீடியோ காட்சியை பார்ப்பவர்கள் மத்தியில் ஒருபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.