Sunday, July 19, 2015

ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் உடல் துண்டுகள் பிரான்ஸில் கண்டுபிடிப்பு: அதிரவைக்கும் புதிய தகவல்கள் ]

ஜேர்மனி சர்வாதிகரியான ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் உடல் துண்டுகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள தடவியல் மருத்துவ நிறுவனம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய 1943ம் காலக்கட்டத்தில், ஜேர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் யூதர்களை கொன்று குவிக்கும் கொடூரமும் அதிகரித்திருந்தது.
Auschwitz என்ற சித்ரவதை முகாமிற்கு யூதர்கள் அனுப்பப்பட்டு அங்கு அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவார்கள்.
இதேபோல், கடந்த 1943ம் ஆண்டில் சுமார் 86 யூதர்கள் சித்ரவதை முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்குள்ள இருட்டு அறையில் அடைத்து விஷ வாயு விட்டு கொல்லப்பட்டனர்.
இவ்வாறு கொடூரமாக கொல்லப்படும் உடல்கள் (அப்போது ஜேர்மனியின் வசம் இருந்த) பிரான்ஸின் Strasbourg நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு August Hirt என்ற உடல்கூறியல் மருத்துவர் உடல்களை சேகரித்து பல பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவார்.
ஆனால், 1944ம் ஆண்டு Strasbourg நகர் ஜேர்மனியிடமிருந்து சுதந்திரம் பெற்று நிலையில், அங்குள்ள யூதர்களின் சடலங்களை மீட்டு, ஓராண்டு காலம் பாதுகாத்து அவற்றை அனைத்தையும் 1946ல் எரித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சில உடல் உறுப்புக்கள் எரிக்காமல் விட்டிருக்க, அவற்றை கடந்த யூலை 9ம் திகதி Raphael Toledano என்ற வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
இறந்துபோன ஒரு யூதரின் குடல்கள் மற்றும் வயிற்று பகுதியும் ஏனைய சில உறுப்புக்களை கண்டுபிடித்துள்ளதாக அந்நகர அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வரலாற்று ஆய்வாளருக்கு Camille Simonin என்ற மருத்துவர் ஏற்கனவே எஞ்சிய உடல் உறுப்புகள் குறித்து தகவல் அளித்த நிலையில், தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இறந்த ஒருவரின் உடலில் ’இது 86-வதாக சாகப்போகும் 'யூதன்’ எனக் குறிப்பிடுவதற்கு அந்த உடலில் 107969 என்ற எண்கள் பொறிக்கப்பட்டிருந்தது தற்போதும் உள்ளதால், அது ஹிட்லரால் கொலை செய்யப்பட்ட யூதர் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த எஞ்சிய உடல் உறுப்புகளை சேகரிக்கும் பிரான்ஸ் அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள யூத அமைப்பிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment