Tuesday, June 30, 2015

ஈழத்தமிழர்களை தலை நிமிர்ந்து பார்க்கும் வெளிநாட்டவர்கள்? இதோ ஒரு உதாரணம் (வீடியோ இணைப்பு)!

ஈழத்தமிழர்களாகிய நாம் 25 வருடத்திற்கு மேலாக புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம்.
எங்கள் கலை கலாச்சாரம் வேறொன்றாக இருக்க வெளிநாடுகளின் கலை கலாச்சாரத்துக்கிடையில் முட்டிமோதி எமது இருப்புக்களை உறுதிபடுத்தவேண்டிய கட்டாயத்துக்குள் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
எப்படி வாழ்ந்தாலும் நாங்கள் வாழ்கின்ற நாடுகளில் வாழ்கின்ற இடங்களில் எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கின்றதா ? அது இங்கு பிறந்து வளர்ந்து வருகின்ற அடுத்த தலைமுறையினர் கையில்தான் இருக்கின்றது.
எங்களை ஒருபாவப்பட்ட இனமாக பார்த்து வந்த வெளிநாட்டவர்கள் இன்று தலை நிமிர்ந்து ஆச்சரியத்துடன் பார்ப்பதை நாம் பார்க்கின்றோம். அதற்கு ஒரு உதாரணம் இதோ,
சுவிஸ் செயோன் Switzerland Seon என்னும் இடம் 5000 மக்கள் வாழ்கின்ற இடமாகும்.
இந்த இடத்தில் 23 வருடமாக வாழ்கின்ற தமிழ் குடும்பத்தில் இருந்து படிப்பிலும், இசைத்துறையிலும் உயர்ந்து இங்கு வாழ்கின்ற எம்இனத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றார் ரம்யா சிவா.
மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் Jugend திருவிழா, இந்த கிராம மக்களின் மிகப்பெரிய திருவிழா. இதில் இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வர்.
அந்த நிகழ்வை துவக்கி வைக்க அந்த நகராட்சியினரும், பாடசாலையும் சேர்ந்து ஒரு திறமையான ஒருவரை தெரிவு செய்வர். பலரை பரிந்துறை செய்து இந்த வருடம் ரம்யா சிவாவை தெரிவு செய்து அந்த விழாவை துவக்கி வைக்க வைத்தார்கள்.
இது வெறும் சாதாரண விடயம் கிடையாது . எமக்கான மிகப்பெரிய அங்கீகாரம், மூன்று வருடத்திற்கு முன்னர் இவரது சகோதரி மிர்துளா சிவா அவர்களுக்கு இந்த கவுரவம் கிடைத்திருந்தது.
இந்த வருடம் மீண்டும் எம் தமிழ் இனத்தவருக்கு கிடைத்திருப்பது எமக்கெல்லாம் பெருமை அல்லவா?
தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வரிகளை இங்கு நினைவு கூறலாம் ( ‘’எம் இனத்தினை ஒரு பாவப்பட்ட இனமாக மற்றவர்கள் பாப்பதை நான் என்றும் விரும்பியதில்லை,, )

No comments:

Post a Comment