Sunday, June 21, 2015

ஆபாச இணையதளங்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்


பிரபல இணையதள தேடல் சர்வரான கூகுள், தனது தேடல் ஆர்ச்சீவ்ஸ் பட்டியலில் இருந்து ஆபாச இணையதளங்களை விரைவில் நீக்கவுள்ளது. கூகுள் இணையதளத்தில், தகவல்களைத் தேடுவோரின் அனுமதியில்லாமல் பாலியல் ஆபாசப் படங்கள் கொண்ட இணைய தளங்கள் தோன்றுவது குறித்து இணையதள வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் இது போன்று பாலியல் காட்சிகள், புகைப்படங்கள் தோன்றுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென கூகுள் பக்கத்தின் விளிம்பு பகுதியில்,பிரத்யேக புகார் பக்கம் திறக்கப்படும். அதில், ஆபாசப் படங்கள் குறித்து புகார் செய்யலாம்.இதன் பிறகு அந்த படங்கள் நீக்கப்பட்டுவிடும்.
இதன் மூலம் ஆபாச தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்படும். இது தொடர்பாக கூகுள் தனது வலைப் பக்கத்தில், தனிப்பட்ட நபர்களின் மீது தாக்குதல் நடத்தி, அவர்களுக்கு மன ரீதியாக சிதைவுகளைத் தரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்கள் உறுதியாக நீக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment