Monday, June 22, 2015

6 வயது சிறுவனைக் கடிக்க வந்த நாயை விரட்டி அடிக்கும் ஹீரோ பூனை இதுதான்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் 6 வயது சிறுவனை கடிக்க வந்த நாயை விரட்டிய பூனைக்கு “ஹீரோ பூனை” விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டில், தங்களது வீட்டுக்கு அருகே 6 வயது சிறுவனான ஜெரெமி டிராய்ன்டபிலோ சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய், அவனை சைக்கிளில் இருந்து கீழே தள்ளியதுடன் காலில் கடித்துள்ளது. தனது சின்ன முதலாளி ஜெரெமியை, நாய் இழுத்து கீழே தள்ளுவதை பார்த்த, வளர்ப்பு பூனை "தாரா" நாயை பாய்ந்து விரட்டியது. பூனை பாய்ந்த பாச்சலில் நாய் பயந்து ஓடும் அளவுக்கு நிலமை போய்விட்டது. இச்சம்பவம் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்தாலும். தற்போது குறித்த பூனைக்கு உள்ளூர் கவுன்சில் ஒரு விருதை வழங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment