உலகில் பல தரப்பினரையும் ஒரு போதை போன்று பேஸ்புக் மோகம் ஆட்டிப்படைக்கிறது.தனது குழந்தையை கொடுமைபடுத்தி பேசஸ் புக்கில் பதிவு செய்து மகிழ்ந்த கொடூர தாய் தற்போது மாட்டி கொண்டார்.அவர் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பதான் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன ஒரு வயது குழந்தையின் கழுத்தில் கயிறை கட்டி தரையில் பிளாஸ்டிக் கோப்பையில் உள்ள உணவை (விலங்கு ) சாப்பிடுவது போல் படம் எடுத்து தனது பேஸ் புக்கில் புகைபடம் போட்டு இருந்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் சமூக நல மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கண்டு பிடித்து குழந்தையை மீட்டனர். தாயாரை மன நல மருத்துவ நிபுணர்களிடம் ஓப்படைத்து உள்ளனர்.
இது குறித்து சமூக நல மேம்பாட்டு துறை செயலாளர் கோராசோன் ஜூலியானா கூறியதாவது: அந்த பெண் குழந்தையை ஒரு பொம்மை போல் நடத்தி உள்ளார்.இது தண்டனைக்குரிய குற்றமாகும்.இது வேடிக்கையாய் செய்யபட்டது என்றாலும் கூட . இது மிகவும் மோசமான செயலாகும்.இது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை யாகும்.இந்த சமபவத்திற்கு பிறகு அந்த பெண் தனது பேஸ் புக் கணக்கை நீக்கிவிட்டார் இருந்தாலும் அந்த புகைபடம் வைரசாக பரவி உள்ளது.Baby-lead-neck
baby-lead-neck1