Tuesday, May 19, 2015

நல்லதொரு காரணத்திற்காக கிளிமஞ்சாரோ மலை உச்சிக்கு ஏறும் கனடிய சிறுவன்!

கனடாவை சேர்ந்த கெவின் மொன்சூர் என்ற 10-வயது சிறுவன், கடல் மட்டத்திலிருந்து 5,895 அடிகள் உயரமுடைய தன்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில் ஏறும் பயணத்தை தொடங்கவுள்ளான்.
கிளிமஞ்சாரோ மலையில் ஏறுவதற்கு ஒவ்வொரு வருடமும் 15,000 மலை ஏறுபவர்கள் முயற்சித்த போதிலும், அவர்களில் 40 சதவிகிதமானவர்கள் மட்டுமே தங்கள் முயற்சியை பூர்த்தி செய்துள்ளனர்.
இந்நிலையில் மிசிசாகாவை சேர்ந்த மொன்சூர் என்ற சிறுவன், வரும் யூன் மாதம் 19ம் திகதி தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளான்.
இவன் பயணத்தின் நோக்கம், ஒன்ராறியோவில் உள்ள மஸ்கோகா என்ற இடத்தில் அமைந்துள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான கோடை முகாமான Camp Oochigeas-ற்கு 50,000 டொலர்களை சேகரிப்பதே ஆகும்.
இச்சிறுவன் கிளிமஞ்சாரோ மலையின் சிகரத்தை அடைவானேயானால் மொன்சூர் கனடாவின் முதலாவதும், இதுவரை ஏறிய இளம் மலை ஏறுபவர்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தை பெறுவான் எனவும் கூறப்படுகிறது.
மொன்சூர் தனது தாய் மற்றும் தந்தை ஆகியவர்களுடன் கிளிமஞ்சாரோ ஏறுகின்றான்.
எவரெஸ்ட் அல்லது K2 மலைகளில் ஏறுவது போன்று இதில் ஏற முடியாதெனவும், பாதுகாப்பான அணுகுமுறை தேவை எனவும் கூறப்படுகிறது.
தனது இலக்கை அடைவதற்கு தன் பெற்றோர் மிகவும் உதவியாக இருப்பதாக கூறியுள்ளான்.

No comments:

Post a Comment