Tuesday, April 28, 2015

பெண் வீட்டாரிடம் வித்தியாசமான வரதட்சணை கேட்ட மணமகன்: ஊர்கூடி வாழ்த்திய அதிசயம்

அரியானா மாநிலத்தில் நடந்த திருமணம் ஒன்றில் வித்தியாசமான முறையில் வரதட்சணை கேட்ட மணமகனை ஊர்மக்கள் ஒன்றுகூடி வாழ்த்தியுள்ளனர்.
திருமண சந்தையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க, லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சமூக நிர்பந்தம் நிலவுகிறது.
இந்நிலையில் அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டம் பர்வாலா கிராமத்தைச் சேர்ந்த சுதேந்திரா ஆசாத் என்ற ஆசிரியர்.
விதிவிலக்காக தனது திருமணத்தையே சமூக மாற்றத்திற்கான ஆரம்பமாக வித்திட்டுள்ளார். இவருக்கு, கடந்த வாரம் திருமணம் நடந்தது.
இவர் திருமணத்திற்கு முன் பெண் வீட்டாரிடம் தனக்கு வரதட்சணை வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், வரதட்சணையாக அவர் கேட்ட பொருளை தெரிந்ததும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
அவர் தனது திருமணத்தில் பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணையாக 1,000 மரக்கன்றுகளை கேட்டு பெற்றுள்ளார்.
அதை தனது ஊரிலும், மணமகள் அனிதா ஊரிலும் நடவு செய்து தங்கள் கிராமத்தை பசுமையாக்க முடிவு செய்துள்ளார்.
மேலும், திருமணத்தின் போது வழக்கமாக ஏழுமுறை அக்னியை வலம் வருவார்கள்.
ஆனால், இவர், பெண் சிசுக்கொலையை கண்டிக்கும் விதமாக, தனது மனைவியுடன் எட்டாவது முறையாக வலம் வந்துள்ளார்.

No comments:

Post a Comment