Tuesday, March 24, 2015

பட்டையை கிளப்பும் தென் கொரியா- பலூனீல் DVD ஐ பறக்கவிடுகிறது என்றால் பாருங்களேன் !

"த இன்ரர் வியூ" என்னும் படு மோசமான நகைச்சுவை மிக்க திரைப்படத்தை அமெரிக்க ஹாலிவுட் நிறுவனம் தயாரித்தது. அதில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் கை படு கேவலமாக நையாண்டி செய்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பலத்த பிரச்சனைகள் ஏற்ப்பட்டுள்ளது. வட கொரியா , இந்த திரைப்படத்தை தடைசெய்துள்ளது. மேலும் அன் நாட்டில் உள்ள பொதுமகன் கூட இந்த படத்தை இன்ரர் நெட்டில் பார்காதவாறு வட கொரியா தடைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு ஆப்புவைக்க தென் கொரியா ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது.
அது என்னவென்றால் , வட கொரியாவின் எல்லையில் வைத்து ராட்சச பலூன்களில் "த இன்ரர் வியூ" DVD க்களை கட்டியுள்ளார்கள். அதனை தற்போது பறக்க விட உள்ளார்கள். அது காற்றில் மிதந்துசென்று வட கொரியாவில் எங்கு வேண்டும் என்றாலும் விழும் அல்லவா ? அதனை எடுத்து வட கொரிய மக்கள் பார்பார்கள். இப்படி ஒரு ஏற்பாட்டை தென்கொரியா செய்துள்ளது.
தி இன்டர்வியூ திரைப்படத்தின் டி.வி.டி-க்கள் கொண்ட 10,000 பலூன்கள் தென் கொரியாவில் தயாராக இருக்கும் நிலையில் பலூன்கள் எல்லைப் பக்கம் வந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வட கொரியாவின் மக்கள் படை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், எல்லையில் வீரர்கள் சீற காத்திருக்கின்றனர். வட கொரியாவின் பக்கம் ஒரு பலூன் பறந்து வந்தாலும் எந்தவித எச்சரிக்கையும் இன்றி சுட்டு வீழ்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment