Friday, March 20, 2015

சூரியனில் இரண்டு கொரோனல் ஓட்டைகள் : தகவல்களை வெளியிட்டது நாசா !


அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா சூரியனில் இரண்டு “கொரோனல் ஓட்டைகள்” இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. சூரியனின் கொரோனா என்ற விளிம்பு ஒளிவட்டப் பாதையின் ஒரு பகுதியே கொரோனல் ஓட்டைகள் ஆகும். சூரியனின் கொரோனா பகுதியில் உள்ள இருண்ட இடங்களை “கொரோனல் ஓட்டைகள் ” என்பர். இந்த கொரோனல் ஓட்டைகள் தன் வடிவிலிருந்து மாறிக்கொண்டே இருக்கும்.
இந்த கொரோனல் ஓட்டைப் பகுதியில் இருந்து தான் காந்தப்புலம் விண்வெளிக்குச் செல்கிறது. சூரியனின் தென் துருவத்தில் இருக்கும் ஒரு கொரோனல் ஓட்டை, மிகப் பெரியதாகவும், ஒட்டு மொத்த சூரிய மேற்பரப்பில் 8 சதவீதத்தை உள்ளடக்கியதாகவும் உள்ளது. மேலும், அதற்கு எதிராக இருக்கும் சிறு கொரோனல் ஓட்டை ஒட்டு மொத்த சூரிய மேற்பரப்பில் 0.16 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது. சூரியனை ஆராய்வதற்கென அனுப்பப்பட்ட நாசாவின் சோலார் டைனமிக் அப்ஸர்வேட்டரி எனும் விண்கலத்திலிருக்கும் ஹெலியோஸீஸ்மிக் அன்ட் மேக்னெட்டிக் இமேஜர் எனப்படும் டெலஸ்கோப் இதனை ஜனவரி 2015 இல் படம் பிடித்து அனுப்பியது.

No comments:

Post a Comment