Thursday, February 12, 2015

இரண்டு நாட்கள் உணவின்றி இளம் பெண்ணை தடுத்து வைத்திருந்த பிரித்தானிய பொலிசார் !


இங்கிலாந்தில் 16 வயது இளம் பெண் ஒருவர் இரண்டு நாட்கள் உணவு மற்றும் குடிநீரின்றி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 44 மணித்தியாலங்களுக்கு குறித்த பெண்ணிற்கு உணவோ, குடிநீரோ நொட்டிங்ஹம்ஷயர் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மன நல சட்டத்தின் கீழ் குறித்த பெண் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பல தடவைகள் அவருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்ட போதும் அவர் அதனை மறுத்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளிலேயே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர் பாதுகாப்பு விசாரணைகளை முன்னெடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் தேவையற்ற வகையில் இரவு முழுவதும் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment