Thursday, February 12, 2015

பஸ் பாசை காட்டி லண்டனுக்குள் வந்த நபர்: திகைத்துப்போன பிரிட்டன் அதிகாரிகள் !

கோஸ்டா கொங்கோடியா கப்பலை பிரட்டிய மாலுமிக்கு 16 வருட சிறைத்தண்டனை !

[ Feb 12, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 3100 ]
4200 பயணிகளோடு பயணித்த கோஸ்டா கொங்கோடியா என்னும் அதி நவீன சொகுசு உல்லாசக் கப்பலை , பாறை ஒன்றோடு மோத விட்ட மாலுமிக்கு 16 வருட சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு இக்கப்பல் கடலில் புரண்டது, பலருக்கு நினைவிருக்கலாம். இதில் 32 பயணிகள் கொல்லப்பட்டார்கள். ஆபத்தில் சிக்கிய பயணிகளை காப்பாற்ற நினைக்காது, தான் முதலில் கடலில் குதித்து தன்னை காப்பாற்றிக்கொண்டார் மாலுமி. பிரான்சிஸ் என்னும் 32 வயதான இந்த மாலுமியின் கவனக் குறைவால் தான், இக் கப்பல் பாறைமேல் மோதி தடம் புரண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களாக நடைபெற்ற வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 4200 பயணிகளை பெரும் ஆபத்தில் தள்ளியது, கடலில் தான் மட்டும் குதித்து தப்பியது என்று இவர்மேல் பல குற்ற்ச்சாட்டுகள் உள்ளது. இவை அனைத்திற்கும் சேர்த்து 16 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
http://www.athirvu.com/newsdetail/2253.html

பஸ் பாசை காட்டி லண்டனுக்குள் வந்த நபர்: திகைத்துப்போன பிரிட்டன் அதிகாரிகள் !

[ Feb 12, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 23115 ]
இளைப்பாறிய ஆசிரியர் ஒருவரின் அட்டகாசமான செயல் இது என்று தான் சொல்லவேண்டும். ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற பிரித்தானியரான ஜோன் வில்லியம் என்பவர் தனது பாஸ்போட்டை இழந்துவிட்டார். விடுதியில் உள்ள இரும்பு பெட்டியில் வைத்திருந்த பாஸ்போட்டை யாரோ திருடிவிட்டார்கள். இதனால் அவர் பிரித்தானிய அரசின் தூதரகம் சென்று , வேறு பாஸ்போட் அப்பிளை செய்து பின்னர் வேறு விமான டிக்கெட் போட்டு தான் பிரித்தானியா திரும்பவேண்டும்என்ற நிலை தோன்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஜோனுக்கு ,ஒரு யோசனை வந்தது. தனது பஸ் பாசை அவர் போட்டொ காப்பி செய்து அதனை ஸ்பெயின் விமான நிலையத்தில் காட்டியுள்ளார்.
என்ன ஆச்சரியம் அங்கே நின்ற அதிகாரிகள் , அதனை ஒரு அடையாள அட்டையாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஐரோப்பிய நாடுகள் சில பாஸ்போட்டுக்கு பதிலாக அடையாள அட்டையை வழங்குகிறது. ஸ்பெயின் அதிகாரிகள் ஆங்கிலத்தை வாசித்தார்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் பஸ் பாசை பார்த்து , ஓகே சொல்லிவிட்டார்கள். தப்பினோம் பிழைத்தோம் என்று அந்த ஆசிரியர் பிரித்தானியா பிளேனை எடுத்து வந்துவிட்டார். பிரித்தானியாவில் உள்ள குடிவரவு அதிகாரிகளுக்கு அவர் பிரித்தானிய பிரஜை என்பது தெரியும். ஆனால் இவர் இப்படி பஸ் பாசை காட்டி விமானத்தில் ஏறினாரா என்று கேள்விப்பட்டு தலையில் கை வைத்துள்ளார்கள்.
ஆசிய நாட்டவர்கள் உண்மையான பாஸ்போட்டை காட்டினால் கூட அதனைக் கூட நோண்டிப் பார்பார்கள் விமான நிலையத்தில் உள்ளவர்கள். இந்த இளைப்பாறிய ஆசிரியருக்கு லக் அடித்துள்ளது என்று தான் கூறவேண்டும் . 

http://www.athirvu.com/newsdetail/2255.html

No comments:

Post a Comment