Friday, February 27, 2015

யார் இந்த "ஜிகாதி ஜான்"? புகைப்படங்களுடன் அம்பலமான பகீர் தகவல்கள் (வீடியோ இணைப்பு)

அயல்நாட்டு பிணைக்கைதிகளை கொல்லும் ஐ.எஸ் தீவிரவாதி தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமது அமைப்புக்கு எதிராக செயற்படும் நாடுகளின் பிரஜைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து ஐ.எஸ் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பிணைக்கைதிகளை தலைத் துண்டிக்கும் வீடியோ காட்சிகளில் முகமூடியுடன் தோன்றிய ஐ.எஸ் தீவிரவாதி யார் என்பது பற்றி விவரங்கள் சில வெளியாகியுள்ளன.
ஜிஹாதி ஜோன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் மொஹமட் எம்வாசி(Mohammed Emwazi). இவர் குவைத்தில் பிறந்து மேற்கு லண்டனில் வசிக்கும் பிரிட்டன் பிரஜை ஆவார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் போலியை தலைத் துண்டிக்கும் வீடியோ முதல் பல்வேறு வீடியோவில் மொஹமட் எம்வாசி தோன்றியுள்ளார்
இவர் குறித்து பிரித்தானிய பொலிசார் ஏற்கனவே அறிந்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் ஜிகாதி ஜான் லண்டனை சேர்ந்தவன் என்றும் பிரித்தானிய பாதுகாப்பு பிரிவுகளுக்கு நன்கு பரிட்சயமானவன் என்ற ரகசிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mohammed Emwazi வடக்கு லண்டனில் உள்ள Queen’s Park கல்லூரியில் கணனி துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளான்.
ஜிகாதி ஜானின் நண்பர்களில் ஒருவரிடம் விசாரணை செய்ததில், ஜிகாதி ஜானின் அசைவுகள் மற்றும் உடல் தோற்றம் Mohammed Emwazi-யை போல் இருப்பதாக உறுதி படுத்தியுள்ளார்.
இருப்பினும், பிரித்தானியா பொலிசார் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

No comments:

Post a Comment