Thursday, February 12, 2015

மில்லியனர் பணக்காரன் பெற்றோல் மிச்சம் பிடித்து தனது உயிரையும் இழந்து காதலியையும் கொன்றார் !


எதில் எதில் எல்லாம் மிச்சம் பிடிப்பது என்ற விவஸ்தை இருக்கவேண்டும். இல்லை என்றால் இப்படி தான் ஏதாவது ஏடாகூடமாக நடக்கும். லண்டன் மற்றும் பாரிசில் நட்சத்திர ஹோட்டல்கள் பல வைத்திருக்கும் பெரும் பண முதலை தான் ஹரி விக்கி. 58 வயதாகும் இந்த மில்லியனர் கடந்த 17 வருடங்களாக சிறியரக விமானத்தை ஓட்டி வந்துள்ளார். விடுமுறைக்கு பிரான்சுக்கு ஷாப்பிங் சென்றுள்ளார். தனது காதலியையும் அழைத்துக்கொண்டு அவர் பிரான்ஸ் சென்று ஷாப்பிங் முடித்துவிட்டு , மீண்டும் லண்டன் திரும்பியுள்ளார். தனது விமானத்தில் லண்டன் திரும்ப முன்னர் அவர் தனது நண்பரோடு தொலைபேசியில் உரையாடியுள்ளார். லண்டனில் பெற்றோல் விலை குறைவு என்பதனை அவர் அறிந்துகொண்டார்.
அதனால் பிரான்சில் இருந்து லண்டனுக்கு பறப்பில் ஈடுபட எவ்வளவு பெற்றோல் தேவையோ அதற்கு தகுந்தால் போல பெற்றோலை நிரப்பியுள்ளார். முழுமையாக டாங்கை புல் செய்யவில்லை. பிரான்சில் இருந்து அவர் புறப்பட்டு, லண்டன் நோக்கிப் பறந்தவேளை எதிர் காற்று பலமாக அடித்துள்ளது. பறப்பில் ஈடுபடும் திசையில் காற்று அடிக்க ஆரம்பித்ததால், விமானத்தின் வேகம் குறைய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 45 நிமிடம் அதிக நேரம் பறப்பில் ஈடுபடவேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது. பெற்றோல் குறைந்துவிட்டதால், வேறு எங்காவது தனது விமானத்தை இவர் தரையிறக்கி இருக்கலாம். ஆனால் தனியார் விமான நிலையம் ஒன்றுக்குச் செல்லும்வரை பெற்றோல் போதும் என்று அவர் நினைத்து விமானத்தை செலுத்தியது பெரும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டது.
திடீரென ஒரு எஞ்சின் நின்றுவிட்டது. இதனால் விமானம் அப்படியே குத்தென்று வந்து விழுந்து நொருங்கியுள்ளது. ஹரி விக்கி மற்றும் அவரது காதலி ஆகிய இருவருமே ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள்.


No comments:

Post a Comment