Monday, February 23, 2015

பிரித்தானியப் பொலிசார் அசாஞ்ஜை கைது செய்ய ரூ.93 கோடி செலவுசெய்துள்ளார்கள் !

விக்கி லீக்ஸ்' நிறுவனர், ஜூலியன் அசாஞ்ஜை கைது செய்யும் நடவடிக்கைக்காக, ஸ்காட்லாந்து யார்டு எனப்படும் பிரிட்டிஷ் போலீசார், இதுவரை, 93 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். எனினும், அசாஞ் இன்னமும் பிடிபடாததால், போலீசார் விரக்தி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட, பிரபல விக்கி லீக்ஸ் நிறுவனத்தின் தலைவர், ஜூலியன் அசாஞ் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிடிவாரன்ட்;அசாஞ்சுக்கு எதிராக பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால், 2012 ஜூனில், லண்டனில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான இகுவாடொரியன் துாதரகத்தில் அவர் தஞ்சம் புகுந்தார். துாதரகத்துக்குள், போலீசார் நுழைய அனுமதி கிடையாது என்பதால், அசாஞ் வெளியேறியதும் அவரை கைது செய்ய, துாதரக அலுவலக வளாகத்தில், பிரிட்டிஷ் போலீசார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்; இதற்காக, இதுவரை, 93 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்காட்லாந்து போலீசார் காத்திருக்கும் நிலையில், அசாஞ், துாதரகத்தை விட்டு வெளியேறாததால், போலீசார் விரக்தி அடைந்துள்ளனர்.
நடவடிக்கை;செலவு அதிகரித்து வருவதால், இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நடவடிக்கையை தொடர்வது என தெரியாமல் போலீசார் விழிபிதுங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment