Monday, February 23, 2015

மார்ச் 14இல் இங்கிலாந்தில் காந்தி சிலை திறக்கப்படும் என்று அறிவித்தார் டேவிட் கமரூன் !

லண்டன் -பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச்சிலையை எதிர்வரும் மார்ச் 14 அன்று திறக்கவிருப்பதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரூன் இன்று அறிவித்துள்ளார். காந்தி சிலை நினைவு அறக்கட்டளைக்கான நிதி ஒரு மில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வெண்கலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காந்தி சிலையின் திறப்பு விழாவிற்கு இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலையை திறப்பதானது, வெறுமனே ஒரு அடையாளம் அல்ல. இந்திய மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு இடையிலான வரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
மகாத்மா காந்தி முன்மாதிரியானவர். அவர் அகிம்சை ரீதியில் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்தவர். நுண்ணறிவான மனிதர். அவரது அவதானிப்புக்களில் பல புதிதாக இருந்தன. அவற்றைப் பின்பற்றுவது காத்திரமானது’ என டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment