Thursday, January 8, 2015

TV சத்தத்தை அதிகமாக வைத்திருந்தார்: வீட்டில் நுளைந்த பொலிசார் TV ஐ தூக்கிச் சென்றுவிட்டார்கள் !


ஸ்காட்லாந்தில் உள்ள தொடர்மாடி வீடு ஒன்றில் இருந்த நபர்கள் தமது தொலைக்காட்சியின் சத்தத்தை மிக மிக அதிகமாக வைத்து பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள். இதனால் அயல் வீடுகளில் இருந்தவர்களுக்கு அது பெரும் தொல்லையாக இருந்துள்ளது. இதனால் அவர்கள் பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். குறித்த தொடர்மாடிக் குடியிருப்புக்கு வந்த பொலிசாருக்கு அதிர்சி தான் காத்திருந்தது. ஏன் எனில் அந்த வீட்டில் இருந்த எவருமே கதவை திறக்கவில்லை. ஆனால் கதவை உடைத்துக்கொண்டு செல்லும் அளவுக்கு அவர்கள் பாரிய குற்றம் எதனையும் செய்யவும் இல்லை. இதனால் சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிசார் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
TV சத்தம் அதிகமாக வரும் அந்த வீட்டின் கதவை தட்டியே பொலிசாரின் கைகள் செயலிழந்து போனது. இறுதியாக இருவர் வெளியே வந்து பொலிசாருடன், அடாவடியாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதனையடுத்து அவர்கள் இருவரையும் பொலிசார் கைதுசெய்ய, மேலும் இருவர் வந்து பொலிசாரொ முரண்பட ஆரம்பிக்க அவர்களையும் சேர்த்து மொத்தமாக நால்வரையும் கைதுசெய்துள்ளார்கள் ஸ்காட்லன் பொலிசார். மேலும் அவர்கள் வீட்டில் உள்ள TV ஐ பொலிசார் அங்கிருந்து அகற்றி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுவிட்டார்கள். இதுதான் பெரியவிடையம் என்கிறார்கள்.
லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நாளாந்தம் இருந்து வருகிறது.. ஆனால் அதற்கு எல்லாம் பொலிசார் இவ்வாறு வந்து TV ஐ துக்கிக்கொண்டு செல்வதே இல்லை. குறித்த நபரை எச்சரிக்கை செய்துவிட்டு செல்வதே வழக்கம். ஆனால் இங்கே ஒரு படி மேலே போய், தொலைக்காட்சி பெட்டியையே பொலிஸ் நிலையம் வரை கொண்டுசென்றுவிட்டார்கள் பொலிசார். இதுதான் இவ்விடையம் பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:

Post a Comment