Wednesday, January 7, 2015

பன்றியை காப்பாற்றிய ஆப்ரஹாம் லிங்கன்: சுவாரசியமான சம்பவம்!

சோதனைகளை சாதனைகளாக்கி உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் ஆப்ரஹாம் லிங்கன்.
இவரது வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் இதோ,
நாடாளுமன்ற கூட்டத் தொடரை விட அந்த பன்றியை துன்பத்திலிருந்து விடுவிப்பது அவருக்கு முக்கியமானதாக தோன்றியது.
சேறு நிறைந்த பள்ளத்தில் இறங்கினார், ஷீக்கள், உடைகள் அனைத்திலும் சேறுபட்டது, அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.
பன்றியை சேற்றை விட்டு விடுவிப்பதிலேயே அவரது மொத்த கவனமும் இருந்தது.
அருவருப்பான அந்த சூழ்நிலையைக் கண்டு சிறிது கூட முகம் சுழிக்காத அவர், சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த பன்றியை அணைத்து தூக்கி வெளியே விட்டார்.
அது மிகுந்த சந்தோஷத்துடன் ஓடியது, முழு மன நிம்மதி பெற்ற ஆப்ரஹாம் சேறு படிந்த அந்த உடைகளோடு காரில் ஏறினார்.
அப்படியே சென்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டார், சபையோர் சேறு படிந்த அவரது உடைகளை கண்டு முகத்தை சுழித்தனர்.
பலர் குழப்பத்தோடு அவரை மேலும் கீழும் பார்த்தனர், சிலர் ஒன்றுமே புரியாமல் அவரை பார்த்தனர்.
அவர்களது பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்ட லிங்கன், தான் வரும் வழியில் நடந்த விடயத்தை கூறினர்.
அதைக் கேட்டதும் சபையே அவரை பாராட்டியது.
இதற்கு ஒரு பாராட்டு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, துன்பத்தில் சிக்கித் தவிக்கும் எந்த உயிரானாலும் அதைக் காப்பாற்றுவது ஒவ்வொரு நபரின் கடமையாகும்.
அந்த கடமை உணர்வு ஜனாதிபதியான எனக்கும் உண்டு, அதையே தான் நானும் செய்தேன். இதில் வித்தியாசமாக நினைக்கவோ, பெரிய அளவில் பாராட்டவோ எதுவும் இல்லை என்றார் பெருந்தன்மையோடு.

No comments:

Post a Comment