Thursday, January 29, 2015

ஒபாமாவின் இந்திய பயணமும், மோடியின் தேநீர் மந்திரமும்

இந்தியாவின் 66வது குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டதால், இந்திய அமெரிக்காவிற்கிடையே நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது.
ஒபாமா பராக் பராக்
இந்தியாவின் 66வது குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவியுடன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்.
அவருக்கு பலவகையான இந்திய உணவுகள் பரிமாறப்பட்டது, மேலும் இந்திய குடியரசு விழாவின் அணிவகுப்பை கண்டுகளித்த அவர், அதனை வெகுவாக பாராட்டினார்.
குறிப்பாக பைக் சாகசம் அவரைக் கவர்ந்து விட்டதால், இனிமேல் மோட்டார் சைக்கிள் கூட ஓட்டமாட்டேன் என கூறினார்.
மோடியின் தேநீர் மந்திரம்
இந்தியா- அமெரிக்கா இடையிலான முழு அளவிலான அணு ஒப்பந்தமானது, அணு உலை செயல்பாடு மற்றும் பராமரிப்பின்போது எதிர்பாராத நிலையில் விபத்து ஏற்பட்டால் அந்த இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? என்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்படாமல் இடர்பாடு நிலவி வந்தது.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேனீர் அருந்தியபடி ஒபாமா நடத்திய பேச்சுவார்த்தையில் நீண்ட நாட்களாக நீடித்துவந்த சிக்கல் நீங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதுதவிர இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு, வணிகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தொடர்பான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
ஒபாமாவின் பேச்சு
டெல்லியில் உள்ள சிரிபோர்ட் என்ற ஆடிட்டோரியத்தில், சுமார் 2000 இந்திய மாணவ, மாணவிகள் மத்தியில் அமெரிக்க அதிபர் ஒபாமா உரையாற்றுகையில், எனது வாழ்க்கையில், மூன்று சக்தி வாய்ந்த பெண்களால் நான் சூழப்பட்டுள்ளேன்(மனைவி, இரு மகள்கள்). ஆனால் இந்திய பெண்கள், அனைத்து குடும்பத்தையும், தங்கள் குடும்பம் போல நினைத்து பாசம் காட்ட கூடியவர்கள்.
இந்திய பெண்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களால் சாதித்து காட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
பெண்களுக்கு பிரச்சினை என்று வரும்போது, நாம் ஒவ்வொருவரும், தந்தையாகவோ, மகன்களாகவோ, சகோதரர்களாகவோ உதவ முன்வர வேண்டும்.
பெண்கள் மதிப்புக்கும், மரியாதைக்கும் தகுதியானவர்கள். எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு தலைமையேற்றது ஒரு பெண் அதிகாரிதான்(பூஜா தாக்கூர்) என்பதில் இருந்து, பெண்களின் பலத்தை புரிந்துகொள்ள முடிந்தது என்று கூறினார்.
சமையல்காரரின் பேரன், டீக்கடைக்காரரின் மகன்
ஒபாமா பல சுவாரசியமான தகவல்கள் பரிமாறிக் கொண்டதில், முக்கியமானது என்னவென்றால் அவரது தாத்தா ஒரு சமையல்காரர், அதை நினைத்து அவர் பெருமைப்பட்டுக்கொண்டார்,
ஏனெனில் ஒரு சமையல்காரரின் பேரன் நாட்டை ஆளும் அளவுக்கு வந்துள்ளேன் என்றார், அதே போன்று இந்தியப் பிரதமர் மோடியின் அப்பா ஒரு டீக்கடைக்காரார் என்பதை பற்றியும் பெருமையாக பேசினார். ஒரு சமையல்காரின் பேரனும், டீக்கடைக்காரரின் மகனும் நாட்டை ஆளுகிறார்கள் என்று கூறி சந்தோஷப்பட்டார்.

No comments:

Post a Comment